வடமாகாணத்திற்கான பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பு உதயம் -

வடமாகாணத்திற்கான பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பு உதயம்

பெப்ரவரி 08, 2018

வடமாணத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளின் உதவியுடன் சிறிலங்கா மத்திய வங்கியின் கிளினொச்சி பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் ‘வடமாகாணத் திட்டத்திற்கான பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பு (Economic Development Framework for a Northern Province Master Plan)’ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் சமகால சமூக-பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அவற்றுக்கான தீர்வுகளையும் பரிந்துரைவுகளையும் தருவதே இக் கட்டமைப்பின் நோக்கமாகும்.

இது குறித்த நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலக மண்டபத்தில் இன்று (பெப்ரவரி 8, 2018) பி.ப. 3:00 மணியளவில் நடைபெற்றது.

மத்திய வங்கியின் ஆளுனர் டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் இக் கட்டமைப்பின் உருவாக்கத்துக்கான ஆணையைப் பிறப்பித்திருந்தார்.  பல தரப்பு மக்களையும் சந்தித்து ஆலோசனகளைப் பெற்றதோடு பல கள ஆய்வுகளையும் செய்து புத்திஜீவிகளின் குழு இத்திட்டத்தின் நோக்கங்கள், படிமுறைகள் பற்றிய அறிக்கை ஒன்றைத் தயார் செய்திருக்கிறது.

பி.சிவதீபன் அவர்களைத் தலைவராகக் கொண்ட இக் குழுவில் டாக்டர் ஏ.கதிர்காமர், டாக்டர் ஏ.கந்தையா, திரு. எஸ்.கிரிஷ்ணானந்தன், திருமதி எஸ். நவரட்ணம், திரு எம். சூரியசேகரம், டாக்டர் ஆர்.சுரேந்திரகுமாரன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

 

Please follow and like us:
error0