வடக்கு மக்களுக்குப் பயணத்தடை – ஜனாதிபதி அலுவலகம் பணிப்பு

Spread the love
ஊரடங்குச் சட்டமும் நீடிக்கப்பட்டுள்ளது

மார்ச் 22, 2020

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வெளியிடங்களுக்குப் பயணம் செய்வது, மறு அறிவித்தல் வரும்வரை, தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஜானாதிபதி அலுவலகம் பிறப்பித்துள்ளது.

அதே வேளை இம் மாவட்டங்களில் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மார்ச் 24, செவ்வாய் காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை), யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலைச் செய்யவேண்டுமெனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இத் தொழுகையை நடாத்திய, சுவிட்சர்லாந்திலிருந்து வருகை தந்தவரெனக் கருதப்படும் மத போதகர் கோவிட்-19 தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என அடையாளம் காணப்பட்டதாலே இன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 15ம் திகதி, கண்டி வீதி, அரியாலையிலுள்ல ‘பிலடெல்ஃபியா தேவாலயத்தில்’ இக் கூட்டுத் தொழுகை நடைபெற்றிருந்ததாகவும், குறிப்பிட்ட போதகர் தற்போது சுவிட்சர்லாந்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ. கேதீஸ்வரன் குறிப்பிட்டார் (கொழும்பு கசெட்)

Print Friendly, PDF & Email
Related:  கொறோனாவைரஸ் | கனடிய-அமெரிக்க எல்லை மூடப்படுகிறது.

Leave a Reply

>/center>