வடக்கு – கிழக்கு விசேட புனர்வாழ்வு அதிகாரியாக கீதாநாத் காசிலிங்கம் நியமனம்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களது புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக கீதாநாத் காசிலிங்கம் என்பவரைப் புனர்வாழ்வு அதிகாரியாக அரசாங்கம் நியமித்துள்ளது.

இதற்கான அனுமதியை அமைச்சரவை நேற்று (ஏப்ரல் 04) வழங்கியுள்ளது.

படம்: கீதாநாத் காசிலிங்கத்தின் முகநூல்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளராகப் பணியாற்றிவந்த கீதாநாத் காசிலிங்கம், புனர்வாழ்வு செயற்பாடுகளில் வடக்கு-கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக இப் புதிய பதவிக்கு நியமனம் பெறுகிறார்.

லண்டன் செளதாம்ப்ரன் பல்கலைக்கழகம், யாழ்.இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரென அவரது முகநூல் கணக்கு தெரிவிக்கிறது.