வடக்கு கிழக்கு எதிர்நோக்கும் கோவிட் அச்சுறுத்தல்; போதிய உபகரணங்களின்றி நோயாளிகள் மரணம்

கோவிட் தொற்றின் மூன்றாவது அலையை எதிர்ப்பார்த்து இலங்கை அரசாங்கம் பல வகையான தயாரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக, அரசாங்கத்தின் பணிப்பின்படி, அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்கள், மாவட்டங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் தமது உடனடித் தேவைக்கான உபகரணங்களின் பட்டியலை ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளன.

இப்பட்டியல்கள் இணைக்கப்பட்ட அமைச்சரின் கடிதமொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அவசியத் தேவையான உபகரணக்களின் பட்டியல்

வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு பல வருடங்களாகக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கிவரும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு சில மருத்துவமனைகளின் உடனடி உபகரணத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு $25,000 டாலர்கள் அன்பளிப்பைச் செய்ததுடன், பொதுமக்களின் பங்களிப்புக்ளையும் இவ்விடயத்தில் கோரியிருந்தது.

இலங்கையில், புதிய திரிபுகளின் வருகையோடு கோவிட் பெருந்தொற்று மிகத் தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இந் நிலையில் அமைச்சர் இவ்வுபகரணங்களுக்காக பகிரங்க வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்.

உதவி செய்ய விரும்புவோர் அனைத்துலக மருத்துவ நல அமைப்புடன் தொடர்பு கொண்டு பங்களிப்புகளச் செய்து கொள்ளலாம்.