வடக்கில் 700 ஏக்கர் நிலம் சீனாவுக்குத் தாரைவார்ப்பு – பா.உ. சிறிதரன்
சீனாவுடனான கடனுக்கான கொடுப்பனவாக வடக்கில் 700 ஏக்கர் நிலத்தை இலங்கை அரசாங்கம் வழங்கவிருக்கிறது என யாழ். மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பா.உ. சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். இரணமடு குளத்துக்கு அருகாமையிலுள்ள 500 ஏக்கர் நிலமும், இயக்கச்சியில் மேலும் 200 ஏக்கர் நிலமும் சீனாவின் கடனுக்கு ஈடாக வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளதாக சிறிதரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கிணங்க இலங்கைக்கு கடன்களை வழங்கிய முக்கிய நாடுகளுடன் சமரச இணக்கப்பட்டுக்கு இலங்கை வரவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருப்பது தெரிந்ததே. இலங்கை கடன் பெற்ற இன்னுமொரு முக்கிய நாடான இந்தியா ஏற்கெனவே கடன் சமரசமொன்றிற்கு இணங்கியிருக்கிறது.
இருப்பினும் இச்செய்தியில் எதுவித உண்மையுமில்லை என இலங்கை அரசாங்கம் மறுத்திருக்கிறது.