Spread the love
எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு

கொழும்பு, டிசம்பர் 1, 2019

வடக்கில் மாவீரர் நாட் கொண்டாட்டங்கள் சட்டத்தை மீறவில்லை - பாதுகாப்புச் செயலர் 1

வடமாகாணத்தின் சில பகுதிகளில் மாவீரர் நாள் கொண்டாடப்பட்டதன் மூலம் சட்டம் எதுவும் மீறப்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண கூறியுள்ளார்.

“உண்மையைச் சொல்லப் போனால் அங்கு சட்டம் எதுவும் மீறப்படவில்லை. எதுவித குழப்பங்களும் அங்கு நிகழவில்லை. மக்கள் கூறுவதைப் போல அது ஒரு ‘மாவீரர் நாளைக்’ கொண்டாடும் ஒரு நிகழ்வு மட்டுமே” என ‘அங்கு சட்ட மீறல்கள் இடம்பெறவில்லையா? என ஊடகர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அவர் குறிப்பிட்டார்.

“முந்தைய அரசாங்கம் அக் கொண்டாட்டங்கள் நடைபெறுவதை அனுமதித்திருந்தது. புதிய அரசாங்கமாகிய நாம், இந்த வேளையில், முற்றான அடக்குமுறையைக் கையாளவேண்டுமென நான் நினைக்கவில்லை. எதிர்காலத்தில் அதை நடைமுறைப்படுத்தலாமென நான் நம்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.


Print Friendly, PDF & Email
Related:  நல்லிணக்கத்தை முன்னெடுக்க மேலும் நடவடிக்கைகள் தேவை - ரணில்