HealthInternational Medical Health Org. (IMHO)

வடக்கில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்

வடமாகாணத்தில் போஷாக்கு பற்றாக்குறையால் நலிவடைந்துவரும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்குடன் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (அமெரிக்கா) இனால் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டம் தொடர்பான முதலாவது கூட்டம் ‘அமுத சுரபி’ என்னும் பெயரில் மே 07, 2024 அன்று யாழ்ப்பானத்தில் நடைபெற்றது.

இத்திட்டத்திற்கமைய உள்ளூர் தேவைகள் மற்றும் கலாச்சார வளங்களுக்கமைய சமூகங்கள் தொடர்ச்சியாகப் பின்பற்றக்கூடிய வகையில் ஊட்டச்சத்து ஆகார முறைகளைத் தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்துவதுடன் அந்நடைமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்படுகின்றனவா, அவற்றின் பெறுபேறுகள் என்ன என்பன போன்ற விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டோருடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இதன் பிரகாரம் வடமாகாணத்திலுள்ள அரியாலை மற்றும் பூனகரி கிராமங்களைச் சேர்ந்த 225 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு வறுமைக்கோட்டிற்குக் கீழேயுள்ள குடும்பங்களிலுள்ள 5 வயதுக்குக் குறைந்த குழந்தைகளிற்கான ஊட்டச்சத்துகளை வழங்க அனைத்துலக மருத்துவ நல அமைப்பு முன்வந்துள்ளது. இதற்காகச் செலவாகும் US$ 10,000 முழுவதையும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (அமெரிக்கா) வின் ஒரு தனி கொடையாளரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.