வங்காளம், ஒடிசா | வாட்டி வதைக்கும் சூறாவளி அம்பன்

வங்காளம், ஒடிசா | வாட்டி வதைக்கும் சூறாவளி அம்பன்

Spread the love

மேற்கு வங்காளம் ஒடிசா மாநிலங்களில் நேற்றுத் தரையிறங்கிய சூறாவளி அம்பன் பேரழிவுகளை அம்மாநிலங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறது. மேற்கு வங்காளத்தில் மட்டும் 12 பேர் கொல்லப்பட்டுள்ளாரகள்.

“ஏற்கெனவே கொரோனாவைரஸ், இடப்பெயர் தொழிலாளர்கள் என்று இடர்ப்பட்டுக்கொண்டிருந்த எமக்கு இப்போது அம்பனும் மேலதிக இடரைக் கொண்டுவந்திருக்கிறது” என வங்க முதல்வர் மமதா முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.கொல்கத்தா விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகள் காற்றோடு போய்விட்டன. மரங்கள் வேர்களோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன. பல கட்ட்டிடங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. கொலகத்தா நகரமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய அனர்த்த நிவாரணப் படை (National Disaster Relief Force (NDRF)) தற்போது நிவாரண, மீள் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றது.

அம்பன் தற்போது பலம் குறைந்த நிலையில்வங்காளதேசத்தில் தரையிறங்கியுள்ளதாக இந்திய வானிலை அவதானிப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பன், பலதசாப்தங்களுக்குப் பிறகு வந்த மிக மோசமான சூறாவளியாகும்.

Print Friendly, PDF & Email