லண்டன் பிரிட்ஜ் தாக்குதலை நடத்திய உஸ்மான் கான் பயங்கரவாதத்திற்காகச் சிறை சென்றவர்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலை நடத்திய உஸ்மான் கான் பயங்கரவாதத்திற்காகச் சிறை சென்றவர்

Spread the love

நவமபர் 29, 2019

வெள்ளியன்று மத்திய லண்டனிலுள்ள லண்டன் பிரிட்ஜ் என்னுமிடத்தில் நடைபெற்ற கத்திக் குத்துச் சம்பவத்துடன் தொடர்புடையவர் 28 வயதுடைய உஸ்மான் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பிறிதொரு பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புபட்டதற்காகச் சிறை சென்று தற்போது கட்டுப்பாட்டுடனான இடைவிடுமுறையில் இருந்தாரெனவும் அதற்கான அடையாளமாக அவரது நடமாட்டத்தை அவதானிக்கும் ‘ராக்’ ஒன்றை அணிந்திருந்தாரெனவும் தெரிய வருகிறது.

இச் சம்பவத்தின்போது இரு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளைச் சீர்திருத்துவது பற்றிய மாநாடொன்று நடைபெற்றுக்கொண்டிருந்த லண்டன் பிரிட்ட்ஜிலுள்ள ஃபிஷ்மொங்கர்ஸ் மண்டபத்தில் இச் சம்பவம் இடைபெற்றது. தாக்கியவரை, அவ்வழியால் போன வழிப்போக்கர்கள் சிலர் மடக்கிப் பிடித்தனர் எனவும் பின்னர் பயங்கரவாதியைக் காவற்துறையினர் சுட்டுக்கொன்றதாகவும் அறியப்படுகிறது. இம் மாநாட்டிற்கு சந்தேகநபரும் அழைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

கொல்லப்பட்ட போது சந்தேகநபர் பொய்யான தற்கொலை அங்கி ஒன்றை அணிந்திருந்ததாகக் காவற்துறையினர் தெரிவித்தனர்.

தாக்குதல் ஒரு தனி மனிதராலேயே செய்யப்பட்டதெனவும், ஐந்து நிமிடங்களே நீடித்தது எனவும் காவற்துறை ஆனையாளர் கிறெசிடா டிக் தெரிவித்தார்.

காயப்பட்டவர்கள் றோயல் லண்டன் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் நாட்டின் பயங்கரவாத ஆபத்துக்கான சாத்தியும் ‘மோசமான’ நிலையிலிருந்து ‘கணிசமான’ என்ற நிலைக்குத் தளர்த்தப்பட்டிருந்தது.

தாக்குதலை நடத்தியவர் தற்கொலை அங்கியை அணிந்திருந்தாரென்ற செய்தி முதலில் கூறப்பட்டது. அதனால் சம்பவ இடத்தைச் சுற்றிப் பெரிதளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன. இருப்பினும் அது பொய்யான அங்கி எனப் பிறகு தெரியவந்தது.

Print Friendly, PDF & Email