World

லண்டனில் தமிழ்ச் சிறுமி கொலை!

ஜூலை 2, 2020: தெற்கு லண்டனிலுள்ள மிற்ச்சம் பகுதியிலுள்ள தமிழரது வீடொன்றில், கடந்த செவ்வாயன்று, பி.ப. , மேற்குறிக்கப்பட்ட சிறுமியும், தாயாரும், மோசமாகக் காயப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்கள். மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற போது சிறுமி உயிரிழந்திருந்தாள் எனத் தெரிகிறது.

இறந்த சிறுமியின் பெயர் சயாகி சிவானந்தம் எனவும், 35 வயதுடைய அவளது தாயாரின் பெயர் சுதா கருணானந்தம் எனவும், அவர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் எனவும் தெரியவருகிறது.

அயலவரான எல்சா கொண்சாலிஸ், இது பற்றித் தெரிவிக்கையில், தனது வீட்டிற்கு அடுத்ததாக உள்ள வீட்டில் இலங்கையைச் சேர்ந்த, நான்கு பேரைக்கொண்ட குடும்பமொன்று வசித்துவந்தது எனவும், சம்பவ தினத்தன்று, அழுது, குளறிக் கேட்டது எனவும் கூறினார்.



தான் பார்த்தபோது, தாயார் நிலத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், அறையெங்கும் இரத்தமயமாகக் காணப்பட்டதாகவும், குழந்தை கட்டிலின் மீது கம்பளத்தினால் மூடப்பட்டுக் கிடந்தது எனவும் கொன்சாலிஸ் தெரிவித்தார்.

பொலிசாரும், அம்புலன்ஸ் சேவையினரும் பி.ப. நான்கு மணிபோல் தலத்துக்கு வந்திருந்தனர் எனவும், மருத்துவமனையில் சிறுமி இறந்துபோனாள் என்றும் தெரியவருகிறது.

இது தொடர்பாக எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும் இது தொடர்பாக தாம் எவரையும் தேட முயற்சிக்கவில்லை எனப் பொலிசார் தெரிவித்ததாகவும் தெரிகிறது.


படம்: நைஜெல் ஹவார்ட்

“என்ன நடைபெற்றது என்பது மர்மமாக இருக்கிறது” என அருகிலுள்ள கடைக்காரர் பத்மநாதன் அரியரட்ணம் தெரிவித்துள்ளார்.

“இறந்த சிறுமி எங்கள் வீட்டுக்கு வந்து விளையாடுவாள். அழகான, எப்போதும் குறும்புத்தனமான குழந்தை. மிகவும் அருமையான குடும்பம். நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்” என மற்றுமொரு அயலவரான தீபகா துரைரட்ணேஸ்வரன் தெரிவித்தார். (Evening Standard).