SportsSri Lanka

லங்கா பிறிமியர் லீக் முதலாவது வெற்றிக் கேடயத்தை வென்றது யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ்


இலங்கையில் முதல் முதலாக நாடு தழுவிய ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்ட – 2020 லங்கா பிறிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிக் கொண்டது யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் விளையாட்டுக் கழகம்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் காலி கிளாடியேற்றர்ஸ் விளையாட்டுக் கழகத்துடன் விளையாடி 53 ஒட்டங்களால் அதைத் தோற்கடித்தது.

முதலாவதாக துடுப்பெடுத்தாடிய ஸ்ராலியன்ஸ் 6 விக்கெட்டுகளுக்கு 188 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதில் ஷோய்ப் மாலிக் 46 ஓட்டங்களையும், காப்டன் திசாற பெரேரா ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். தனஞ்சய லக்‌ஷன் 36 ஓட்டங்களைக் கொடுத்து 3 விகெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு ஆடிய கிளாடியேற்றர்ஸ், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதில் பானுகா ராஜபக்ச 40 ஓட்டங்களையும், அசாம் கான் 36 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.