லக்சம்பேர்க் - பொதுமக்களுக்கு இலவச போக்குவரத்தைத் தரும் முதல் நாடு -

லக்சம்பேர்க் – பொதுமக்களுக்கு இலவச போக்குவரத்தைத் தரும் முதல் நாடு

Spread the love
Luxembourg Becomes First Country to Make All Public Transit Free, Luxembourg Tram. Image via Creative Commons
Luxembourg Tram. Image via Creative Commons
லக்சம்பேர்க் நகரின் வாகனச் செறிவு படம்: nexter.org

உலகிலேயே பொதுமக்களுக்கான சகல போக்குவரத்தையும் இலவசமாக வழங்கும் நாடு லக்சம்பேர்க்.

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பிரதமர் சேவியர் பெற்றெலின் கூட்டாட்சி அரசு அடுத்த ஆண்டு கோடை காலம் முதல் சகல ரயில், ட்ராம், பஸ் வண்டிகளின் போக்குவரத்தையும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

தனியார் வாகனங்களில் நீண்ட பயணங்களை மேற்கொள்வதன் மூலம் வெளியேற்றப்படும் கரியமில வாயுவைக் குறைப்பதற்காக இன்நடவடிக்கையை எடுப்பதாகப் புதிய அரசு அறிவித்துள்ளது. உலகின் அதி செறிவுள்ள போக்கு வரத்துடைய நாடுகளில் லக்சம்பேர்க்கும் ஒன்று.

பெல்ஜியம், ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளால் சூழப்பட்ட லக்சம்பேர்க் நகருக்கு 400,000 வாகனதாரிகள் அயல்நாடுகளிலிருந்து பணி நிமித்தம் வந்து போகிறார்கள். இந்த வருடம், இருபது வயதுக்குக் குறைந்தவர்களுக்கு இலவச போக்குவரத்தை லக்சம்பேர்க் வழங்கியிருக்கிறது. இரண்டாம் நிலைப் பாடசாலை மாணவர்களும் வீடுகளுக்கும் பாடசாலைகளுக்குமிடையில் இலவசமாகப் பயணிக்கலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலே லக்சம்பேர்க் ஒன்றுதான் அதன் சனத்தொகையைவிட அதிக எண்ணிக்கையில் வாகனங்களைக் கொண்ட நாடு.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  2019, வரலாற்றிலேயே சமுத்திரங்கள் அதியுச்ச வெப்பத்தை அடைந்த வருடம்!