றிஷாத் பதியுதீனைக் கைது செய்ய 6 பொலிஸ் குழுவினர் தயார் – சட்டமா அதிபர் ஏவல்!

றிஷாத் பதியுதீனைக் கைது செய்ய 6 பொலிஸ் குழுவினர் தயார் – சட்டமா அதிபர் ஏவல்!

Spread the love

பொதுப்பணத்தைத் துஷ்பிரயோகம் செய்த காரணத்துக்காகவும், 2019 ஜனாதிபதி தேர்தலின்போது தேர்தல் விதிகளை மீறியமைக்காகவும், பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனையும் மேலுமிருவரையும் கைது செய்யும்படி சட்டமா அதிபர் டப்புல டெ லிவேரா பிரதி பொலிஸ் பா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இக்கைதுகளுக்காகப், பிரதி பொலிஸ் மா அதிபரைக் கோட்டை மாஜிஸ்திரேட்டிடம் பிடியாணையைப் பெறுமாறும் அவர் கூறியிருந்தார். ஆனால், இப்படியான குற்றங்களுக்கு பிடியாணை பெறத் தேவையில்லை எனக் கூறி, கோட்டை மாஜிஸ்திரேட் பிரியந்தா லியனகே, பிடியாணை பெறச் சென்ற குற்ற விசாரணைப் பிரிவிற்குக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

அதே வேளை, இவ் விடயத்தில் முறைப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அது குறித்த அறிக்கையைத் தமக்குச் சமர்ப்பிக்கும்படி மாஜிஸ்திரேட் குற்றவிசாரணைப் பொலிசாருக்குக் கட்டளையிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குற்ற விசாரணைப் பிரிவு இக் கைதுகளுக்காக 6 குழுக்களைத் தயார்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

2019 ஜனாதிபதி தேர்தலின்போது யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்துவந்த முஸ்லிம் மக்களை வாக்களிப்பதற்கு யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு பொதுப் போக்குவரத்து வண்டிகளை (CTB Buses) பதியுதீன் பாவித்தார் என முன்னர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.

Print Friendly, PDF & Email