றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலோடு தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, 6 மாதங்களுக்கு மேல், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த வன்னி மாவட்ட பா.உ. றிஷாட் பதியுதீன் நேற்று (14),கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட்டினால், இரண்டு 5-மில்லியன் ரூபாய்கள் பணப் பிணையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகளுக்கு உதவினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, 24 ஏப்ரல் 2021 அன்று, பா.உ. பதியுதீன், குற்ற விசாரணைப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
பதியுதீந் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்கப்படுவது பற்றி, முன்னாள் பிரதமர் ரணில் உட்படப் பல எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியதோடு, பதியுதீன் மீதான குற்றங்களுக்கு ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றன்றனவா எனச் சென்ற வாரம், பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கேட்டிருந்தனர்.
