றியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக 100 அரசாங்க பா.உ.க்கள் ஜனாதிபதிக்குக் கடிதம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு ஆதாரம் போதாமையால் றியாஜ் பதியுதீன் விடுதலை

றியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக 100 அரசாங்க பா.உ.க்கள் ஜனாதிபதிக்குக் கடிதம்

Spread the love

முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீநின் சகோதரர் றியாஜை, குற்றவிசாரணைப் பொலிசார் விடுதலை செய்தமை பற்றி விசாரணைகளை நடத்தும்படி கோரி, 100 சிறீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதியிடம் மனு சமர்ப்பித்துள்ளார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைச் செய்தவர்களுக்கு உதவிகள் புரிந்தாரென்ற சந்தேகத்தில் ஏப்ரல் 14 அன்று, றியாஜ் பதியுதின் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்படாமலேயே செப்டம்பர் 30 அன்று குற்ற விசாரணைப் பிரிவு அவரை விடுதலை செய்திருந்தது.

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், றியாஜ் பதியுதீனை மீண்டும் கைதுசெய்யும்படி இந்த 100 பா.உ. க்களும் கோரியுள்ளார்கள் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிமால் சிறிபால டி சில்வா, றஞித் சியம்பலபிட்டிய, ஜனக வக்கும்புற, டி.வி.ஷனக, சிசிற ஜயக்கொடி, எஸ்.வியாழேந்திரன், ஷிஹான் சேமசிங்க, கனக ஹேரத், டிலும் அமுனுகம, சுசில் பிரேமஜயந்த, மொஹாமெட் முசாமில், உதய கம்மன்பில, அங்கஜன் ராமநாதன், காதர் மஸ்தான், விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளெ ஆகியோர் கையெழுத்து வைத்த 100 பேரில் அடங்குவர்.

Print Friendly, PDF & Email