Spread the love

தகாத நடத்தையில் ஈடுபட்ட குற்றத்துக்காகத் தேடப்பட்டுவரும் ‘சுவாமி’ நித்தியானந்தா தனது மறைவிடமான ‘கைலாச நாட்டிற்குச்’ சொந்தமான ரிசேர்வ் பாங்க் மற்றும் அதன் சுய நாணயமான ‘கைலாசியன் டாலர்’ ஆகியவற்றை, சனியன்று, உத்தியோகப்பற்றற்ற முறையில், சடங்கு ரீதியாக அறிவித்திருக்கிறார். அதன் பயனீட்டுக்கான சம்பிரதாய வெளியீடு பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

‘றிசேர்வ் பாங்க் ஒஃப் கைலாச’ சட்டபூர்வமாகப் பதியப்பட்ட வங்கியெனவும், அதை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதெனவும் கைலாச நாடு ரஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கும் நாடுகளில் மட்டுமே கைலாசியன் டாலர் செல்லுபடியாகும் எனவும் கைலாச இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தற்போது வெளியிடப்பட்ட கைலாசியன் டாலர், விரைவில் ‘றிசேர்வ் மாங்க் ஒஃப் கைலாச’ வங்கியை அங்கீகரித்திருக்கும் நாட்டில் பாவனைக்கு வரும் எனவும் அதே வேளை தாம் வேறு பல நாடுகளுடன் ஒப்பந்தங்களைக் கையெழுத்திட முயற்சித்து வருவதாகவும் அது நிறைவேறும் பட்சத்தில், அந்தந்த நாடுகளில் கைலாச நானயம் புழக்கத்திறு வருமெனவும் காணொளி ஒன்றின் மூலம் சுவாமி நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

எட்டு வெவ்வேறு பெறுமதிகளைக் கொண்ட, தங்கத்தினாலான 77 வகையான நாணயங்களை அவர் வெளியிட்டுள்ளார். ஒரு கைலாசியன் டாலர் 11.66 கிராம் தங்கத்தினாலும், கால் கைலாசியன் டாலர் 2.91 கிராம் தங்கத்தினாலும், அரை கைலாசியன் டாலர் 5.81 கிராம்கள் தங்கத்தினாலும், நான்கில் மூன்று கைலாசியன் டாலர் 8.74 கிராம்கள் தங்கத்தினாலும், இரண்டு கைலாசியன் டாலர் 23.32 எடை தங்கத்தினாலும், மூன்று கை. டாலர் 34.99 கிராம்கள் தங்கத்தினாலும், நான்கு கைலாசியன் டாலர் 46.65 கிராம்கள் தங்கத்தினாலும், ஐந்து கை.டாலர் 58.31 கிராம்கள் தங்கத்தினாலும், 10 கை.டாலர் 11 கிராம்கள் தங்கத்தினாலும் ஆனவை.



இந் நாணயங்கள் புராதன காலத்தில் 56 இந்து நாடுகளில் பாவனையிலிருந்த நாணயங்களை அடியொற்றி வடிவமைக்கப்பட்டவை என நித்தியானந்தா அறிவித்திருக்கிறார்.

'றிசேர்வ் பாங்க் ஒஃப் கைலாசா', 'கைலாசியன் டாலர்' |  நித்தியானந்தா அறிவிப்பு! 1

கைலாச நாடு சர்வதேச ரீதியில் எந்தவொரு நாட்டினாலும் அங்கீகரிக்கப்படாத நாடாகையால் தற்போதைக்கு இந் நாணயம் எந்தவொரு நாட்டிலும் பாவிக்கப்பட முடியாது. இந் நாட்டின் பிரஜைகளாக வர விரும்புவோர் இத் தங்கத்தைப் பண்டமாற்றுச் செய்துகொள்ள முடியும். அதே வேளை வத்திக்கன் அரசின் மகாராஜா பாப்பரசர் வைத்திருப்பதுபோலவொரு முத்திரை கைலாசநாட்டின் அரசாங்க அதிகாரிகளினானும் அணியப்படுமென அக் காணொளியில் நித்தியானந்தா தெரிவிக்கிறார்.

கைலாச நாட்டின் 300 பக்கம் கொண்ட பொருளாதாரக் கொள்கை சட்டபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அவரது ஆச்சிரமத்திலுள்ள பெண்கள் மீது காமலீலைகள் புரிந்த காரணத்தால் இந்தியா நித்தியானந்தா மீது பல வழக்குகளைத் தொடுத்திருக்கிறது, 2018 இல் இந்தியாவிலிருந்து தப்பியோடி அவர் பசிபிக் சமுத்திர நாடான வணுவாத்து என்ற தீவில் மறைந்து வாழ்வதாகப் பேசப்படுகிறது. இவரைக் கைது செய்வதற்கு சர்வதேச பொலிசார் ‘நீல மூலை’ அறிக்கையை விட்டிருக்கிறது.

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 | தொடர்புகளைக் கண்டுபிடிக்க TraceTogether டோக்கன்கள் - சிங்கப்பூரில் அறிமுகம்
‘றிசேர்வ் பாங்க் ஒஃப் கைலாசா’, ‘கைலாசியன் டாலர்’ |  நித்தியானந்தா அறிவிப்பு!
றிசேர்வ் பாங்க் ஒஃப் கைலாசா

‘றிசேர்வ் பாங்க் ஒஃப் கைலாசா’, ‘கைலாசியன் டாலர்’ | நித்தியானந்தா அறிவிப்பு!