றிசாட் பதியுதீன், மஹேஷ் சேனநாயக்கா மீது வழக்கு மீள எடுக்கப்படுகிறது! -

றிசாட் பதியுதீன், மஹேஷ் சேனநாயக்கா மீது வழக்கு மீள எடுக்கப்படுகிறது!

Spread the love

ஜனவரி 11, 2020

றிஷாட் பதியுதீன், மஹேஷ் சேனநாயக்கா மீது விசாரணைகள் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர் எனப்படும் சந்தேக நபர் ஒருவரை விடுதலை செய்வதற்கு உந்துதலாக இருந்தார் என முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை மீள எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முந்நாள் இராணுவத்தளபதி மஹேஷ் சேனநாயக்கா பதவியிலிருந்தபோது, உயிர்த்த ஞாயிறு குண்டுபிடிப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டவர் ஒருவர் பற்றி முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தன்னை அழைத்து விசாரித்ததாகவும் அதில் “இவ் விடயத்தில் என்ன செய்யலாம் எனப் பதியுதீன் கேட்டதாகவும், அதற்குத் தான் இவ் விடயத்தை ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன் எனப் பதிலளித்ததாகவும்” பத்திரிகையாளர் மாநாடொன்றில் சேனநாயக்கா கூறியிருந்தார்.

‘சத்திய கவேஷகாயோ இயக்கம்’ இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென அழுத்தம் பிரயோகித்த காரணத்தால், தற்போது, குற்றப்பிரிவு இவ் வழக்கை மீள எடுத்துக்கொண்டிருக்கிறது.

இது குறித்த விசாரணைகளை பதியுதீன், சேனநாயக்கா இருவரும் எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  ராஜித சேனாரத்ன மாயம்! | மஹிந்த வீட்டில் தேடுங்கள் - அனுர குமார!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *