ரொறோண்டோ | வீட்டு உரிமையாளருக்கு $55,000 வாடகை பாக்கி!

ரொறோண்டோ | வீட்டு உரிமையாளருக்கு $55,000 வாடகை பாக்கி!

Spread the love

ரொறோண்டோவின் அதி பணக்காரர் வாழும் பகுதியான பிறைடிள் பாத் (Bridle Path) இலுள்ள தமிழர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் வசிக்கும் வாடகைக் குடியிருப்பாளர் கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து வாடகை தரவில்லை என வீட்டின் உரிமையாளரின் மகனும், வீடு விற்பனை முகவருமான வருண் சிறிஸ்கந்தா தெரிவித்திருக்கிறார்.

ரொறோண்டோ | வீட்டு உரிமையாளருக்கு $55,000 வாடகை பாக்கி! 1

5 மில்லியன் டாலர்கள் பெறுமதியான இவ் வீட்டில் குடியிருப்பவர்கள் மாதம் $7,800 வாடகை தருவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தார்கள் எனவும், ஆனால் பெப்ரவரி 2020 இலிருந்து அவர்களது நிலுவை $55,000 ஆக உயர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவிக்கிறார். 2016 இல் அவர்கள் அவ்வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள்.

“எனது பெற்றோர் பெருந்தொகையான வாடகை வீடுகளுக்கு உரிமையாளர்கள். ஆனால் இவ் விடயம் எல்லோரையும் குழப்பத்துக்குள்ளாக்கிறது” என்கிறார் வருண் சிறிஸ்கந்தா.

“வாடகைக் குடியிருப்பாளர்கள் பெப்ரவரி முதல் வாடகை தரவில்லை. செப்டம்பருக்கும் தருவார்கள் போல் தெரியவில்லை. கடந்த அக்டோபர் (2019) அவர்கள் வீடு மாறப் போவதாக அறிவித்தார்கள். ஆனால் இதுவரை எதுவுமே நடைபெறவில்லை. அப்போது அவர்கள் வாடகையை ஒழுங்காகச் செலுத்தி வந்தார்கள். தற்போது அவ் வீட்டை விற்பதற்கான பதாகையை வீட்டின் முன்றலில் வைத்திருக்கிறேன். அதை பார்த்தேனும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

அதே வேளை, கோவிட்-19 காரணமாக, வீட்டை வாங்க விரும்புபவர்கள் வீட்டின் உள்ளே வந்து பார்வையிட முடியாது என, வாடகைக் குடியிருப்பாளர்கள் சார்பாக சட்டத்தரணி ஒருவர் வீட்டு உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். ரொறோண்டோ றியல் எஸ்டேட் சபையின் கோவிட்-19 தொடர்பான சட்டம் இதற்கு அனுமதிக்கிறது. இதனால் வீட்டை விற்பதற்கான சாத்தியமும் குறைவாகவே இருக்கிறது.

இப்போது நீதி மன்றத்தில் வழக்கு எடுக்கப்படும்வரை சிறிஸ்கந்தா பொறுத்துக்கொள்ளவேண்டி இருக்கிறது.இது பற்றி வாடகைக் குடியிருப்பாளர் லெனார்ட் வால்ட்மன் கூறுவது “இது அப்படி ஒரு எளிமையான விடயமல்ல (This is not a black-and-white issue, it’s far from a black-and-white issue)”. இந்த வீட்டில் பல திருத்த வேலைகள் இருக்கின்றன. எதுவுமே செய்யப்படவில்லை. அதற்காகவே வாடகை கொடுப்பது நிறுத்தப்பட்டது. எங்களுக்கு சமூகத்தில் நல்ல பெயருண்டு. வீட்டில் செய்யப்படவேண்டிய வேலைகள் செய்யப்படவில்லை என்பதற்காகத்தான் வாடகையை நிறுத்தினோம்” என்கிறார்.

ரொறோண்டோ வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக் குடியிருப்பாளர் சபை (Ontario’s Landlord and Tenant Board ) இப்படியான பிரச்சினைகளை முதலில் விசாரித்து தீர்ப்புகளை வழங்குகிறது

“எனக்குத் தெரிந்தவரை வாகனம் தரிக்கும் கராஜ் கதவு தான் பழுதடைந்திருந்ததாகக் கூறப்பட்டது. அதுவும் சென்ற மாதம் தான். வாடகை தரப்படாமல் நாம் அதைச் செப்பனிட மறுத்துவிட்டோம். இதைவிட வேறெந்த பழுதுகள் பற்றியும் வாடகைக் குடியிருப்பாளர் குறிப்பிடவில்லை. நாம் பொதுவாகவே திருத்தவேலைகளை உடனேயே செய்துவிடுவதுண்டு” என்கிறார் சிறிஸ்கந்தா. (Courtesy: blogTO) **முகப்புப் படத்திலுள்ள வீடு இதில் சம்பந்தப்பட்ட வீடல்ல

Print Friendly, PDF & Email