News & AnalysisTechnology & ScienceUS & Canada

ரொறோண்டோவில் தயாராகும் மின் வண்டி – $4,000 டாலர்களுக்கு வாங்கலாம்?

கனடாவின் பிரபலமான வாகன உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் மக்னா இண்டர்னாஷனல் (Magna International) நிறுவனம் மிக விரைவில் முச்சக்கர மின் வண்டித் தயாரிப்பில் இறங்கவுள்ளது.

$4,000 டாலர்களுக்கு விற்பனையாகவிருக்கும் இவ் வண்டி முழுக்க முழுக்க கனடாவில் தயாரிக்கப்படவுள்ளது. ஒன்ராறியோவில், ரொறோண்டோவுக்குப் புறநகரான அரோராவைத் தளமாகக் கொண்ட இந் நிறுவனம் 27 நாடுகளில் தனது கிளைகளைக் கொண்டுள்ளது.

அதியுச்சம் மணித்தியாலத்துக்கு 32 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இவ்வண்டி, ஒரே மின்னேற்றத்துடன் 100 கி.மீ. வரை செல்லக்கூடியது. ஒரு ஆசனத்தைக் கொண்ட இவ்வண்டியின் ட்ரங்க்கில் ஒரு முழு சூட்கேசை அடக்கலாம். விலை $4,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தலைமைச் செயலகம் இருக்கும் இடத்திலிருந்து மிக அருகே இவ்வண்டிக்கான தயாரிப்பு தொழிற்சாலை அமையவுள்ளதென அதன் முதன்மை முகாமையாளரும், ஸ்தாபகருமான ஃபிராங்க் ஸ்ரோணாச் தெரிவித்துள்ளார். இதற்கான நிலத்துக்கான அங்கீகாரத்தை நகரசபை ஏற்கெனவே கொடுத்துள்ளது. மாநில அரசின் அங்கீகாரம் கிடைத்தவுடன் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்குமென ஸ்ரோணாச் தெரிவித்துள்ளார்.