ரொறோண்டோவின் முதலாவது கொறோனாவைரஸ் மரணம்
ரொறோண்டோவின் முதலாவது கொறோனாவைரஸ் மரணம்

ரொறோண்டோவின் முதலாவது கொறோனாவைரஸ் மரணம்

Spread the love

மார்ச் 22, 2020

ரொறோண்டோவைச் சேர்ந்த 70 வயதுள்ள ஒருவர் கோவிட்-19 வியாதிக்குப் பலியாகியுள்ளதாக ரொறோண்டோ பொதுச் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது ரொறோண்டோவின் முதலாவது கொறோனாவைரஸ் மரணம் எனக் கருதப்படுகிறது.

ரொறோண்டோவின் முதலாவது கொறோனாவைரஸ் மரணம் குறித்து இன்று (ஞாயிறு) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில், மரணமாகியவர் சமீபத்தில் இங்கிலாந்துக்குச் சென்று வந்தவர் என சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரொறோண்டோவிலுள்ள ஒரு மருத்துவமனையில் அவர் பரிசோதிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அவர் சுய தனிமையைப் பேணியிருந்தார் எனவும் அவர் பற்றிய தகவல்கள் மருத்துவமனையினால் பொதுச்சுகாதாரத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து தாம் அது பற்றிய விசாரணைகளை முடித்திருந்ததாகவும், திணைக்கள அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், மார்ச் மாதம் 14ம் திகதி, குறிப்பிட்ட நோயாளி மிசிசாகாவிலுள்ள ட்றில்லியம் மருத்துவமனைக்கு, மேலதிக சோதனைக்காகச் சென்றிருந்தாரென்றும், துரதிர்ஷ்டவசமாக, மார்ச் 21, சனிக்கிழமை, அவர் மரணமடைந்தார் எனவும் தெரியவருகிறது.இதுவரையில் (ஞாயிறு) ரொறோண்டோவில் 220 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்களென்றும், ஒன்ராறியோ மாகாணம் முழுவதும் மொத்தம் 424 நோய்த் தொற்றாளர்கள் உள்ளனரென்றும், மூன்று மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றனவென்றும் அறியப்படுகிறது. (குளோபல் நியூஸ்)

Print Friendly, PDF & Email