ரெனிஸ் | பியான்கா அண்ட்றீஸ்கு செரீனா வில்லியம்ஸ் ஐத் தோற்கடித்தார்

Spread the love
கனடாவின் பியான்காவிற்கு முதலாவது ‘கிராண்ட் ஸ்லாம்’ வெற்றி
Teenager Bianca Andreescu defeated Serena Williams 6-3 7-5 to win her first Grand Slam title
பியான்கா அன்ட்றீஸ்கு – முதலாவது யூ.எஸ். ஓப்பிண் கிராண்ட் ஸ்லாம் வெற்றிக்கிண்ணம் படம்: AP Photo

கனடா, மிசிசாகாவில் பிறந்த 19 வயதுடைய பியான்கா அண்ட்றீஸ்கு அமெரிக்க பிரபல ரெனிஸ் ஆட்ட வீராங்கனை செரீனா வில்லியம்ஸை 6-3, 7-5 என்ற ரீதியில் அடுத்தடுத்து இரண்டு செட்களில் தோற்கடித்து யூ.எஸ். ஓப்பிண் ரெனிஸ் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றார். இதுவே பியான்காவின் முதல் யூ.எஸ்.ஓப்பின் வெற்றி.

செரீனா வில்லியம்ஸ் இந்தத் தடவை வென்றிருந்தால் அது அவரது 24 வது கிராண்ட் ஸ்லாம் வெற்றி என்பது மட்டுமல்ல தனியாக விளையாடி 24 தடவைகள் வெற்றிபெற்றுள்ள மார்கரெட் கோர்ட் டின் சாதனையை முறியடித்திருப்பார். துர்ப்பாக்கியமாக அவருக்கு அது கிட்டவில்லை. இறுதிச் சுற்றில் தோல்வியடைவது செரீனாவுக்கு இது இரண்டாவது தடவை. 2018 இல் நடுவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கமும் அதைத் தொடர்ந்து நயோமி ஒசாகாவிடம் தோற்றமையும் அவருக்கு ஆறாத வடுக்கள்.

ரெனிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்

37 வயதுடைய செரீனாவின் விளையாட்டில் முன்னர் போன்று மூர்க்கமான சேர்விஸ் இருக்கவில்லை. அவரது கடந்த கால மூர்க்கமான சேர்விஸ் இந்தத் தடவை பியான்காவிடம் இருந்தது. ஒரு வருடத்துக்கு முன்னர் பியான்கா முதலாவது சுற்றிலேயே தோற்று விடுபவர். இதுவரை நான்கு ‘மேஜர்’ ஆட்டங்களில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இன்று அவர் ஒரு விற்பன்ன வீராங்கனையோடு மோதி வெற்றிபெற்ரிருக்கிறார்.

ரெனிஸ் விளையாட்டின் வரலாறு.

19ம் நூற்றாண்டில் இருந்து செல்வந்தர்களால் விளையாடப்பட்டு வந்த இந்த விளையாட்டில் போட்டிகள் என்று வரும்போது அதில் விற்பன்னர்கள் மட்டுமே பங்கு பற்றலாம் என்றிருந்தது. வெல்பவர்களுக்குப் பெரும் பண முடிச்சும் பெருமையும் சேரும். அமச்சூர் எனப்படும் ‘ புதிய ஆட்டக்காரர்களை’ போட்டிகளில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.


1968 இல் இந்த கிராண்ட் ஸ்லாம் அல்லது மேஜர் போட்டிகளில் புதியவர்களும் பங்குபற்றலாம் எனத் ‘திறந்து விடப்பட்டது’ இதனால் நான்கு மேஜர்களுக்கும் பினவருமாறு பெயர்கள் சூட்டப்பட்டன.

  1. US Open
  2. Australian Open
  3. French Open
  4. Wimbledon Open

இந்த ‘கிராண்ட் ஸ்லாம் / ஓப்பிண் போட்டிகளில் பங்கு பற்றும் பிரபலங்களுக்கு பருத்த பண முடிப்பு, ஊடக விளம்பரம், விளம்பர வருமானம், உலகத் தரவரிசை (ranking) என்று பல அனுகூலங்கள் உள்ளன.

மேஜர் (US Open) ஆட்டத்தில் வென்றதால் பியான்கா $3.85 மில்லியன் பணமுடிச்சைப் பெற்றுள்ளார். இவ் வெற்றிக்கு முதல் இவர் உலகின் தர வரிசையில் 15ம் இடத்தில் இருந்தார். தற்பொழுது முதலாவது தரவரிசையில் இருப்பவர் நயோமி ஒசாகா.

Print Friendly, PDF & Email
Related:  கொறோனாவைரஸ் - அமெரிக்கா முதலாமிடத்தில்
>/center>