ரெக்ஸாஸில் பாரவண்டியில் கடத்தப்பட்ட 46 சட்டவிரோத குடிவரவாளர் மரணம்

மெக்சிகோவிலிருந்து பார-இழுவை வண்டி (tractor-trailer) மூலம் அமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலத்துக்குக் கடத்திக் கோண்டுவரப்பட்ட 46 சட்டவிரோத குடிவரவாளர்கள் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வர் குழந்தைகளாவர்.

வண்டிக்குள் இருந்து கதறும் சத்தத்தைக் கேட்ட நகரப் பணியாளர் ஒருவர் கொடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து நேற்று (திங்கள்) பொலிசார் மேற்கொண்ட சோதனையின்போது இந்த அவலம் கண்டுபிடிக்கப்பட்டது. பொலிசார் சமபவ இடத்தை அடைந்தபோது வண்டியின் பின் கதவு பாதியில் திறக்கப்பட்டும் அதே வேளை ஒரு உயிரற்ற உடல் நிலத்தில் கிடப்பதும் தெரியவந்தது. ரெக்ஸாஸ் மாநிலத்தின் சான் அன்ரோணியோ நகர பொலிசார் இச் சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பாக இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இறந்தவர்கள் பலர் வெளிநாட்டவர்களாயினும் அவர்களது பூர்வீகங்கள் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. அமெரிக்காவுக்குக் குடிபெயர முயற்சிக்கும் மெக்சிக்கர்கள் உட்படப் பல வெளிநாட்டவர்களைக் கடத்திப் பணம் சம்பாதிக்கும் பலர் அமெரிக்க-மெக்சிக்க எல்லைகளில் இயங்கி வருகிறார்கள்.

மெக்சிக்கோவின் தூதுராலய இணைப்பாளர் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்றுகொண்டிருப்பதாகவும் இறந்தவர்களில் மெக்சிக்கர்கள் யாராவது இருப்பின் அவர்களது குடும்பங்களுக்கு தாம் உதவிசெய்யத்தயாராக இருப்பதாக அவர் அறிவித்திருப்பதாகவும் உள்ளூற் செய்தித்தாபனமாகிய KSAT அறிவித்துள்ளது.

இந் நகரைல் சட்டவிரோத குடிவரவாளர்கள் விபத்துக்குள்ளாகி மரணமாவது இது முதல் தடவையல்ல. 2017 இல் சான் அன்ரோணியோ வால் மார்ட் அங்காடி ஒன்றிற்கு வெளியே தரிக்கப்பட்டிருந்த பாரவண்டியொன்றில் 10 குடைவரவாளர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிர்ந்தன. 2003 இல் இதே நகரில் பாரவண்டியொன்றில் 19 பேர் மூச்சுத்திணறி மரணத்தறுவாயில் இருக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டனர்.