Spread the love

ரணில் விக்கிரமசிங்க ஜனவரி 2021 வரை தலைமைப்பதவியிலிருப்பார்

இன்று நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக, ருவான் விஜயவர்த்தனா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அவரோடு, கட்சியின் தற்போதைய உதவித் தலைவர் ரவி கருணாநாயக்காவும் இப்பதவிக்காகப் போட்டியிட்டிருந்தார். விஜயவர்த்தனாவுக்கு 28 வாக்குகளும், கருணாநாய்க்காவுக்கு 10 வாக்குகளும் கிடைத்திருந்தன.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனவரியில் பதவி விலகியதும் விஜயவர்த்தனா கட்சியின் தலைவராவார். இதற்கு முன் சஜித் பிரேமதாச இப் பதவியை வகுத்து வந்தார். சமாஜி ஜன பலவேகய கட்சியை உருவாக்கியதும், அவர் இப் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தார். சமாகி ஜன பலவேகய கட்சியில் இணைந்ததற்காக, பிரேமதாசவுடன், மேலும் 54 பேர் ஐ.தே.கட்சியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்கள்.



74 வருட வரலாற்றைக் கொண்ட, இலங்கையின் மிகப் பழைய கட்சியான ஐ.தே.க., ஆகஸ்ட் 05 பாராளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனத்தைத்தானும் பெறவில்லை. கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கு இளைய தலைமுறையினர் ஒருவர் தேவை எனப் பல கட்சி அங்கத்தவர்கள் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

45 வயதுடைய ருவான் விஜேவர்த்தன சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்காவின் பூட்டனும், ‘லேக் ஹவுஸ்’ பத்திரிகை நிறுவன அதிபர் விஜேவர்த்தனவின் பேரனும், ரணில் விக்கிரமசிங்கவின் மைத்துனருமாவார்.

Print Friendly, PDF & Email
Related:  20 வது திருத்த வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது பிரதமரால் நிறுத்தப்பட்டது - கட்சி உறுப்பினர்களின் அதிருப்தி காரணம்!
ருவான் விஜயவர்த்தன ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர்.
ருவான் விஜேவர்த்தன ஐ.தே.கட்சியின் அடுத்த தலைவர்

ருவான் விஜயவர்த்தன ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர்.