ராஹுல் காந்தி தமிழ்நாட்டிலும் போட்டியிடவேண்டும் | கே.எஸ்.அழகிரி
ஏப்ரல் 18 நடக்கவிருக்கும் லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி தமிழ் நாட்டிலும் போட்டியிட வேண்டும் எனவும் அவர் தான் அடுத்த பிரதமர் என்பதை தி.மு.க. தான் முதன் முதல் ‘அறிவித்தத்ஹு’ எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
“உத்தரப் பிரதேசத்தில் அமெதி என்னும் தொகுதியில் போட்டியிடும் ராஹுல் காந்தி ஒரு வடக்கு மானிலத்துக்கு மாத்திரம் சொந்தமானவரல்ல. அவர் இந்திய மக்களின் சொத்து என்பதைக் தெரிவிக்க அவர் தமிழ்நாட்டிலும் போட்டியிட வேண்டும்” என அவர் மேலும் கூறினார்.
வரப்போகும் லோக் சபா தேர்தல்களில் எதிர்க்கட்சி வெல்லும் பட்சத்தில் ராஹுல் காந்தியே அடுத்த பிரதமர் என தி.மு.க. தலைவர் எம்.கே.ஸ்டாலின் தெரிவித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
“இப் பின்னணியில், தமிழ்நாட்டின் எந்தவொரு தொகுதியிலும் ராஹுல் காந்தி போட்டியிடலாம். தி.மு.க. தலைமையிலான முற்போக்குக் கூட்டணி இதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் நபுகிறேன். காந்தி மதம், சாதி என்பனவற்றுக்கு அப்பற்பட்டவர் என்பதால் அவர் உதாரப் பிரதேசத்துக்கு மட்டுமே உரியவர் எனக் கருத முடியாது. அவர் இந்தியர்களின் சொத்து. இந்தியாவின் ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி உழைத்து வருபவர். உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடும் அதே வேளை நாட்டின் தென் பகுதியான தமிழ் நாட்டிலும் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும்” எனத் தெரிவித்தார் கே.எஸ்.அழகிரி.