ராவுப் ஹக்கீம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார்
26 August 2019
சென்னை: சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், உயர் கல்வி அமைச்சருமான திரு.ராவுப் ஹக்கீம் கடந்த சனியன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அது ஒரு உத்தியோகபோர்வமற்ற, மரியாதைக்கான சந்திப்பு என ஹக்கிம் ஊடகவியலாளௌக்குக் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் விடயம் தொடர்பாக, பல்லின மக்களையும் கொண்ட உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தன் சகல மக்களின் நலன்களையும் கவனிக்க வேண்டும், குறிப்பாக, காஷ்மீரி மக்களின் உரிமைகள் பாதிக்கபடாது பாதுகாக்க வேண்டும். சிறீலங்காவைப் பொறுத்த வரையில் ” எங்கள் அரசாங்கம் தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காகக், குறிப்பாக கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகள் விடயங்களில், பலவற்றைச் செய்து வருகிறோம். இந்த வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஒரு பாரிய அரசியல் மாற்றம் நிகழவிருக்கிறது” என்று தெரிவித்தார் ஹக்கிம்.