ராஜ் ராஜரத்னம் விடுதலையானார்

Spread the love

செப்டம்பர் 09, 2019

அமெரிக்க – இலங்கைத் தமிழரும் பங்குச் சந்தை விதிகளை மீறியதாகக் கைதுசெய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருமான ராஜ் ராஜரத்னம் அவர்கள் இரண்டு வருடங்கள் முன்பாகவே சிறையிலிருந்து விடிவிக்கப்பட்டுள்ளார்.

கல்லியோன் ஹெட்ஜ் ஃப்ண்ட் என்ற நிறவனத்தின் அதிபராகிய ராஜ் ராஜரத்னம் அவர்கள் பங்குச் சந்தை விதிகளுக்கு முரணான ‘உள் வர்த்தகத்தில்’ (insider trading) ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் 11 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தார். அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய ஹெட்ஜ் ஃபண்ட் (hedge fund) உள் வர்த்தக மோசடி யென வர்ணிக்கப்பட்ட இவ் வழக்கு மிகப் பிரபலமானது மட்டுமல்ல ராஜ் ராஜரத்தினத்தின் பெயரையும் உலகம் முழுவதும் பிரசித்தமாக்கியிருந்தது.

ராஜ் ராஜரத்னத்தின் கல்லியோன் குழுமம்

குறைக்கப்பட்ட இரண்டு வருட காலங்களிலும் அவர் ஏறத்தாழ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டவர் போல இருப்பதாகவும் பகலில் மட்டும் வேலைக்குப் போக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.

7 பில்லியன் பெறுமதியான கெட்ஜ் ஃப்ண்ட் நிதியத்தை அவரது நிறுவனம் நிர்வகித்து வந்தது. மே 2011 இல் பங்குச் சந்தை தொடர்பான இரகசியங்களை அவர் பிறருடன் பகிர்ந்துகொண்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு 11 வருட சிறைத்தண்டனையும் 10 மில்லியன் டாலர்கள் அபராதமும் வழங்கப்பட்டதுடன் 53.8 மில்லியன் டாலர்களை அவர் இழக்கவேண்டியும் ஏற்பட்டது.

2018 முதல் படிச் சட்டத்தின் பிரகாரம் (2018 First Step Act) 60 வயதுக்கு மேலானவர்களும், மரணத்தை எதிர்நோக்கும் கைதிகளும் தமது தண்டனைக் காலத்தின் இறுதி இரண்டு ஆண்டுகளை வீட்டில் கழிக்கலாம் என்பதற்கிணங்க 62 வயதாகும் ராஜரத்னம் விடுதலையானார்.

1997 இல் ஆரம்பிக்கப்பட்ட அவரது கல்லியோன் முதலீட்டு நிதியம் என்ற நிறுவனம் ஒரு காலத்தில் சிறீலங்காவின் மிகப் பெரிய நிதி நிறுவனமாகவும், பல புளூ-சிப் (blue-chip) நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த நிறுவனமாகவும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் 52.4 மில்லியன் பங்குகளைக் கொண்ட மிகப் பெரிய பங்காளியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email
Related:  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பயணிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை!
>/center>