ராஜிவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும்படி அ.இ.அ.தி.மு.க. பா.ஜ.க.வுக்கு அழுத்தம்


ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடையவர்களெனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்களை விடுத்ச்லை செய்யுமாறு தமிழ்நாடு மாநில ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க. வின் தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இக் கோரிக்கையை அது நிராகரித்துவிட்டதாகத் தெரிய வருகிறது.

இச் சிறைக்கைதிகளை விடுதலை செய்யும்படி நீண்டகாலமாக அ.இ.அ.தி.மு.க. கோரிவருகுகிறதெனினும் தற்போது தமிழ்நாட்டிலுள்ள அரசியற் சூழ்நிலையில் இவ் விடுதலை அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்கு மிகவும் சாதகமாக அமையுமென அ.இ.அ.தி.மு.க. தலைவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

கொலைக் கைதிகளை விடுவிக்கும்படி செப்டம்பர் 2018 இல் தமிழ்நாடு மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததுமல்லாமல், தமிழ்நாடு அரசின் தீர்மானத்துக்குப் பதிலளிக்குமாறு தமிழ்நாடு உச்சநீதிமன்றம் மாநில ஆணையாளருக்கு ஆணையும் இட்டிருந்தது. இருந்தும் அதை நிறைவேற்ற ஆணையாளர் மறுத்து வருகிறார்.

சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனைச்சாமி இது குறித்து ஆளுனர் பன்வரிலால் புரோகித் அவர்களையும் சந்தித்திருந்தார். இருப்பினும் இவ் விடயத்தில் மத்திய அரசு மிகவும் உறுதியாக இருந்துவருவதாகத் தெரிகிறது. இக் கைதிகளை விடுவிப்பதன் மூலம் தமது கட்சி பயங்கரவாதிகள் விடயத்தில் மென்மையாக இருப்பதாக மக்கள் கருதிவிடுவார்கள் எனவும், இதன் மூலம் தேர்தலில் கிடைக்கும் பலன் மிகவும் சொற்பம் என பா.ஜ.க. கருதுவதாகாவும் தெரிவிக்கப்படுகிறது.ராஜிவ் காந்தி கொலைக்குக் காரணமானவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரில், சாந்தன், முருகன், றொபேர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் இலங்கைத் தமிழர்கள் ஆவர். அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் இலங்கை அரசு அவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடுமெனவும் இதனால் இலங்கை-இந்திய உறவில் பாதிப்பு ஏற்பட்டு இலங்கை சீனாவுடன் நெருக்கமாகுவத்ற்கான சந்தர்ப்பங்கள் உண்டு எனவும் பா.ஜ.க. கருதுகிறது.

இச் சூழ்நிலையில் பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்வதன் மூலம் அ.இ.அ.தி.மு.க. வாக்காளர் மத்தியில் தமது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள முடியும். ஆனால் தமிநாடு மாநிலத்தில் பலமுள்ள அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை நிறுவுவதற்கு உதவுவதன் மூலம் பா.ஜ.க. எந்தவித பலனையும் பெற்றுவிடப்போவதில்லை. தமிழ்நாடு மாநிலத்தில் பா.ஜ.க., தனியாக ஒரு பலமான கட்சியாக உருவாகுவதையே விரும்புகிறது. எனவே இவ் விடயத்தில் தனது பங்காளிக் கட்சிக்கு உதவி செய்ய பா.ஜ.க. மறுத்துவருவது புரிந்துகொள்ளக்கூடியது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயத்தில், தி.மு.கவின் பங்காளிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும், ராஜிவ் காந்தி முடும்பத்தினரும், தாம் இக் கொலைக்கைதிகளை மன்னித்துவிட்டதாகவும், அவர்கள் விடுதலையைத் தாங்கள் ஆட்சேபிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.