ராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில், த.தே.கூ குழுவினர் அமெரிக்கா பயணம்
இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் தீர்வு பற்றிக் கலந்தாலோசிக்கவென தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் குழுவொன்று அமெரிக்கா சென்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.உ. எம்.ஏ. சுமந்திரன், வழக்கறிஞர் கலாநிதி கனகீஷ்வரன் மற்றும் சட்ட விரிவுரையாளர், கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் இக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இக் குழு அமெரிக்காவிலுள்ள அரசியலமைப்பு சட்ட நிபுணர்களுடந் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வேளை இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கான கதவுகள் முற்றாக மூடப்பட்டுவிடவில்லை எனவும் தாம் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே உள்ளோம் எனவும் த.தே.கூ. பா.உ. சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளதாக பிறிதொரு செய்தி தெரிவிக்கிறது.
“தமிழ்ர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிக் கலந்தாலோசிக்க ஆளும் கட்சி பா.உ. ஷாந்த பண்டார, கூட்டமைப்புக்கு விடுத்த அழைப்பு தொடர்பாகப் பேசும்போதே, பா.உ. சிறிதரன் மேற்கண்ட விடயத்தைத் தெரிவிதிருந்தார்.