ராஜபக்சவின் பிரதமர் பதவிக்கு நீதிமன்றம் தற்காலிக தடை

டிசம்பர் 03, 2018

மஹிந்த ராஜபக்சவும் அவரது மந்திரி சபை மற்றும் துணை அமைச்சர்கள் ஆகியோரும் தொடர்ந்தும் தங்கள் முறையற்ற அரசங்கத்தைத் தொடர முடியாது என்று மேல் முறையீட்டு நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவினது முறையற்ற அரசாங்கம் தொடர்வது அரசமைப்புக்குப் புறம்பானது என்று 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்த முறையீட்டின் மீது தீர்ப்பளிக்கும் போது மேல் முறையீட்டு நீதிமன்றம் இவ்வாணையைப் பிறப்பித்தது. அத்தோடு, எவ்வகையான அதிகாரத்துடன் அரசாங்கத்தைத் தொடரலாம் என்பதற்கான ஆதாரத்தை மகிந்த தரப்பு கொடுக்க வேண்டும் என்றும் நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

வழக்கு டிசம்பர் 12-13ம் திகதிகளில் மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது என அறியப்படுகிறது.

சுதந்திரமான நீதித் துறையை மீளவும் உருவாகியதன் பலனை ரணில் விக்கிரமசிங்க அடைந்துவிட்டார் என அரசியல் வட்டாரங்கள் சிலாகிக்கின்றன.