ராகம போதனா வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கோவிட் நோயாளிகள்

பல்கனிகளில் உயிரற்ற உடல்களின் மத்தியில் படுத்திருக்கும் நோயாளிகள்

ராகம போதனா வைத்தியசாலையில் நேற்று (04) எடுக்கப்பட்ட காணொளி ஒன்று வலைத் தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இக் காணொளியில், வைத்தியசாலையில் நோயாளிகளுக்குப் போதுமான படுக்கைகள் இல்லாதமையால் பல்கனிகளில் படுத்துறங்கும் காட்சி நாட்டின் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதைக் காட்டுகிறது.

இந் நோயாளிகளின் மத்தியில் இரண்டு உயிரிழந்த நோயாளிகளின் உடல்களும் இர்ப்பதாக காணொளியை எடுத்தவர் விபரிக்கின்றார்.

யாழ்ப்பாணத்திலும் நிலமை மிக மோசமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே வேளை அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (அமெரிக்கா) பல மில்லியன் டாலர்கள் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. சுவாசக் கருவிகள் முதல் கோவிட் பாதுகாப்பு உபகரணங்கள் வரை 30க்கும் மேற்பட்ட கொள்கலன்களில் அனுப்பப்பட்ட இவ்வுபகரணங்கள் இலங்கையைச் சென்றடைந்துவிட்டன எனவும் விரைவில் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட அவசிய உபகரண தேவைகளுள்ள மருத்துவமனைகளுக்கு அவை விநியோகிக்க்ப்படவுள்ளன என அனைத்துக மருத்துவநல அமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.ரகுராஜ் தெரிவித்துள்ளார்.