ரஷ்யா தானியத்தைத் திருடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை – ஐ.நா.

யூக்கிரெய்ன் நாட்டின் தானிய விளைச்சலை ரஷ்யா திருடுகிறது என்ற யூக்கிரெய்ன் அரசின் குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமுமில்லை என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்ரெபனீ டுஜாறிச் தெரிவித்துள்ளார்.

யூக்கிரெய்னின் கோதுமையை ரஷ்யா திருடுகிறது என்ற குற்றச்சாட்டை யூக்கிரெய்ன் அரசாங்க அதிகாரிகள் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். செவ்வாயன்று (7), துருக்கிக்கான யூக்கிரெய்ன் தூதுவர் மீண்டும் இக்குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதுபற்றிக் கருத்துக்கூறுமாறு கேட்டதற்கு, இதுபற்றித் தம்மிடம் எந்த தகவலும் இல்லை என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் மற்றும் உலக உணவுத் திட்ட அலுவலகம் ஆகிய இரண்டுமே மறுத்துள்ளன.

உலகின் முதல் ஐந்து தானிய ஏற்றுமதி நாடுகளில் யூக்கிரெய்னும் இருக்கிறது. தானிய ஏற்றுமதியில் ரஷ்யா முன்னணியில் இருப்பதால யூக்கிரெய்ன் தானியத்தைத் திருடவேண்டிய தேவை அதற்கில்லை. ஆனால் ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமாகியதிலிருந்து யூக்கிரெய்னின் துறைமுகங்கள் அனைத்தையும் ரஷ்யா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. இதனால் ஐரோப்பிய, உலக நாடுகளுக்கு யூக்கிரெய்ன் தானிய ஏற்றுமதி தடைப்பட்டுவிட்டது.

இதே வேளை, யூக்கிரெய்ன் தானியம் போலந்து வழியாக தரைவழிஉயால்மைரோப்பாவுக்கு கொண்டு வருவதில் இன்னுமொரு சிக்கல் இருக்கிறது. யூக்கிரெய்னின் ரயில் தண்டவாளங்களுக்கும் போலந்து தண்டவாளங்களுக்குமிடையில் வேறுபாடு இருப்பதால் இத் தானியம் ரயில் வண்டியிலிருந்து இறக்கி மீண்டும் போலந்து வண்டிகளில் ஏற்றி அனுப்பப்படவேண்டும்.

அத்தோடு, யூக்கிரெய்னின் கரையோரப்பகுதியெங்கும் அதன் இராணுவம் கனிம அகழ்வில் ஈடுபட்டு வருவதாலேயே அப்பகுதியினூடு தானிய ஏற்றுமதியைச் செய்யமுடியாமல் இருக்கிறது என ரஷ்யாவும் குற்றம்சாட்டியுள்ளது.

யூக்கிரெய்னின் தானிய ஏற்றுமதிக் குறைபாட்டினால் ஐரோப்பா பாரிய பஞ்சத்தை எதிர்நோக்கவுள்ளது எனவும் அதன் நேசநாடுகள் தமது மக்களின் தேவைக்காகத் தமது தானிய ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்தக்கூடும் என்ற அச்சத்தினால் ரஷ்ய – யூக்கிரெய்ன் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்பதில் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் முனைப்பாக உள்ளன எனவும் தெரியவருகிறது. இதனால் யூக்கிரெய்ன் அதிபர் செலென்ஸ்கி மீது பல ஐரோப்பிய நாடுகள் மறைமுகமான அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன்.