ரவிராஜைக் கொல்வதற்கு கருணா பிரிவிற்கு கோதா 50 மில்லியன் ரூபாய்கள் கொடுத்தார் -புலனாய்வு அதிகாரி
முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜ ரவிராஜைக் கொல்வதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச கருணா பிரிவிற்கு 50 மில்லியன் ரூபாய்களைக் கொடுத்தார் என முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி லியனாராச்சி அபேரத்ன கொழும்பு மேலதிக நீதவான் திலினா கமகே முன்னிலையில் தெரிவித்திருக்கிறார்.
இக்கொடுப்பனவு பாதுகாப்பு அமைச்சு மூலம் அதன் அதிகாரி வசந்தா என்பவர் மூலம் கருணா பிரிவிற்கு வழங்கப்பட்டிருந்தது எனவும் இவ்விடயம் குறித்து உதவி பொலிஸ் மாஅதிபர் கீர்த்தி கஜநாயக்கா, புலனாய்வுப் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மஹில் டோல் ஆகியோரும் அறிந்திருந்தன எனவும் அபேரத்ன தெரிவித்திருக்கிறார்.
இச்சாட்சியததைத் தொடர்ந்து மார்ச் 2 வரை நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அதே வேளை சமபவத்தை நேரே கண்டவர் எனக் கருதப்படும் அஞ்செலோ ரோய் என்பவரை அடுத்த விசாரணையின்போது நீதிமன்றக்குக் கொண்டுவரும்படி நீதவான் உத்த்ரவிட்டிருக்கிறார்.
நவம்பர் 10, 2006 இல் கொழும்பில் வைத்து ரவிராஜ் கொலைசெய்யப்பட்டிருந்தார். அப்போதிருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கும் இக்கொலைக்கும் தொடர்பிருக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகிறது. (Colombo Telegraph)