ரஜினியின் ‘ஜெய்லர்’ படத்தில் மலையாள நடிகர் விநாயகன்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெய்லர் படத்தில் பிரபல மலையாள நடிகர் விநாயகனுக்கு முக்கிய பாத்திரமொன்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வசூல் / பொழுது போக்கு ஆகியவற்றை மட்டுமே மனதில் கொண்டு எடுக்கப்படும் இப் படத்துக்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் 22 அன்று ஐதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லி வருகிறார்கள். அதே வேளை விநாயகனை இப் படத்தின் பிரதம வில்லனாக நடிக்கவைக்க ரஜினி முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் பிரமாண்டமான அளவில் தயாரிக்கப்படும் இப் படத்தில் கன்னட நடிகர் ஷிவாராஜ்குமாரும் முக்கிய பாத்திரமொன்றில் நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்தஹ்ர் இப் படத்துக்கு இசையமைக்கிறார்.