அரசியலுக்கு வரும் எண்ணத்தைத் தான் கைவிட்டுவிட்டதாகவும், தனது அரசியல் வருகைக்கான தயாரிப்பிற்காக ஆரம்பித்த ரஜினி மக்கள் மந்றத்தை இன்று முதல் கலைத்துவிடுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் இன்று (திங்கள் 12) அறிவித்திருக்கிறார்.
“ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியலில் ஈடுபட நான் உத்தேசித்திருந்தேன். ஆனால் அதற்கான கால நேரம் பொருத்தமானதாக இலாமையால் அது சாத்தியமாகவில்லை. எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் நோக்கம் எனக்கில்லை. எனவே இன்று முதல் ரஜினி மக்கள் மன்றம் மக்கள் நலனை முன்வைத்து சேவை வழங்கும் ஒரு சமூக நிறுவனமாக இயங்கும் என அறிவிக்கிறேன்” என ரஜினிகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு புதுவருட தினத்துக்கு முதல்நாள் தான் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்திருந்தார். கட்சியின் முன்னோடியாக ரஜினி மக்கள் மன்றத்தை அமைத்து அதன் மூலம் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து தனிக் கடசி ஒனறை ஆரம்பிப்பத்ற்கான தயாரிப்புகளைச் செய்து வந்தார். ஆனால் திடீரென, டிசம்ப்ர் 29, 2020 இல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என அறிவித்துவிட்டார். ஆரம்பத்தில் அவரது உடல் நிலை காரணமாக இந்தமுடிவை எடுத்திருக்கிறார் எனக் கூறப்பட்டது. ஆனாலும் அது காரணமில்லை எனப் பின்னர் தெரியவந்தது.
தற்போது அடுத்த அதிரடி அறிவிப்பாக இன்று தனது அரசியல் பிரவேசத்துக்கு முற்றாக முழுக்குப் போட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். வழக்கம் போலவே, ரஜினி ஸ்டைலில், காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.