ரஜனியின் ‘தர்பார்’

ரஜனியின் ‘தர்பார்’

Spread the love

‘பேட்டை வேலன் காளி’யின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் படம் ‘தர்பார்’. இதற்கான படப்பிடிப்பு தற்போது மும்பாயில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ரஜனியின் 'தர்பார்' 1
படப்படிப்பின்போது ரஜனியுடன் ஏ.ஆர்.முருகதாஸ்

‘தர்பார்’ பற்றி விபரம் எதுவும் வர முன்னரே முருகதாஸும் ரஜனியும் தோற்றமளிக்கும் நிழற்படமொன்று வெளியானபோதே ரஜனியின் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். டுவிட்டரில் இப்பொழுது வலம் வந்துகொண்டிருக்கும் இப்படம் ‘தலைவரின்’ ஏதோ ஒரு வருகைக்குக் கட்டியம் கூறுவதுபோல இருக்கிறது.

‘தர்பார்’ படப்பிடிப்பு படு வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்திலுள்ள ஈழத்தமிழரின் நிறுவனமான லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பான இப்படம் 2020 பொங்கல் வெளியீடாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தர்பார்’ ஒரு வர்த்தக ரீதியான பொழுதுபோக்குப் படமெனவும் சகல வயதினரையும் மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய ஒன்று எனவும் அறியப்படுகிறது.

ரஜனிகாந்தை அறிமுகப்படுத்தும் பாடலை அனிருத் ரவிச்சந்தரின் இசையமைக்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார் என்பதை வைத்துக்கொண்டு ரசிகர்கள் மீதியை உருவகித்து ரசித்துக்கொள்ளலாம்.

Print Friendly, PDF & Email