ரஜனிகாந்த் இலங்கை வருவதற்குத் தடையில்லை – நாமல் ராஜபக்ச

Spread the love

ஜனவரி 18, 2020

நடிகர் ரஜனிகாந்த் திரு சீ.வி.விக்னேஸ்வரனுடன்

இந்திய நடிகர், சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த் இலங்கை வருவதற்கு இலங்கை அரசு ஒரு போதும் தடைவிதிக்கவில்லை என இலங்கை அரசு இன்று தெரிவித்துள்ளது.

ரஜனிகாந்த் இலங்கை வருவதற்கான விசா அவருக்கு மறுக்கப்பட்டதென எழுந்த வதந்தியில் உண்மையில்லை எனப் பாராளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்ச தனது ருவீட் மூலம் தெரிவித்துள்ளார்.


“இந்திய பிரபல நடிகர் ரஜனிகாந்த் இலங்கை வருவதற்கான விசா மறுக்கப்பட்டதெனக் கூறப்படுவதில் உண்மை இல்லை, அது ஒரு வதந்தியே. நானும், எனது தந்தையும், இத் தீவிலுள்ள பலரைப் போல, அவரது படங்களின் தீவிர ரசிகர்கள். அவர் இலங்கைக்கு வருகைதர விரும்பினால் அதற்கு ஒரு தடையும் இருக்கப்போவதில்லை” என நாமல் தனது ருவீட்டில் தெரிவித்துள்ளார்.

சென்ற வாரம், முந்நாள் வடமாகாண முதலமைச்சர் திரு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சென்னை சென்றிருந்த சமயம் நடிகர் ரஜனிகாந்த் அவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன் போது, இலங்கையில் தமிழர்களது பிரச்சினைகள் குறித்தும் அவருக்கு விளக்கியிருந்தார்.

இச் சந்திப்பின்போது அவர் ரஜனிகாந்த் அவர்களை இலங்கைக்கு வருகைதந்து தமிழர்களைச் சந்தித்து நிலைமைகளை அறிந்துகொள்ளுமாறு அழைப்பொன்றையும் கொடுத்திருந்ததாகப் பேசப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>