யேமன் போரில் பாவிக்கப்படும் பிரித்தானிய ஆயுதங்கள் -

யேமன் போரில் பாவிக்கப்படும் பிரித்தானிய ஆயுதங்கள்

  • போரின் ஆரம்பத்தில் பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஆயுதங்கள் சவூதி அரேபியாவிற்கு விற்கப்பட்டன
  • யேமன் போர் இதுவரைக்கும் 8000 பொதுமக்களின் மரணத்திற்கும், எண்ணற்ற காலரா மற்றும் பஞ்சம் போன்ற விளைவுகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது
  • மார்ச் 2015 முதல் இதுவரையில் 6.2 பில்லியன் பித்தானிய பவுண்டுகள் பெறுமதியான ஆயுதங்கள் சவூதி அரேபியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன

‘மிகக் கொடூரமான, மனிதாபிமானற்ற நிகழ்வு’ என ஐ.நா.வினால் வர்ணிக்கப்பட்ட யேமன் போர் இதுவரைக்கும் 8000 பொதுமக்களின் மரணத்திற்கும், எண்ணற்ற காலரா மற்றும் பஞ்சம் போன்ற விளைவுகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. இப் போரில் நேரடியாகப் பங்குபற்றும் சவூதி அரேபியாவிற்கு பிரித்தானியா ஆயுதங்களை விற்ப்னை செய்து வருகிறது. மார்ச் 2015 முதல் இதுவரையில் 6.2 பில்லியன் பித்தானிய பவுண்டுகள் பெறுமதியான ஆயுதங்கள் சவூதி அரேபியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன என ‘ஆயுத விற்பனைக்கு எதிரான செயற்பாடு’ (Campaign Against Arms Trade – CAAT)) அமைப்பினர் குரலெழுப்பி வருகின்றனர்.

போர் விமானங்கள், குண்டுகள், ஏவுகணைகள் ஆகியன இவற்றில் அடங்கும். இவ்வாயுத விற்பனை சட்டத்துக்கு முரணானதா என்பதை அறிய நீதிமன்றம் செல்வதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள். சவூதி அரேபியா, யூனைரெட் அரப் எமிறேட்ஸ், எகிப்து, பாஹ்ரெயின், குவெய்த், கட்டார் ஆகிய நாடுகள் இப் போரில் கூட்டணியாகச் செயற்படுகின்றன.

“சவூதி அரசின் தலைமையிலான நடத்தப்படும் இந்தப் போரில் ஆயிரமாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டாலும் ஆயுத வியாபரிகளை இவை எதுவும் நிறுத்தப் போவதில்லை” என ‘காட்’ அமைப்பைச் சேர்ந்த ஆன்ட்றூ சிமித் கூறினார்.

யேமென் போர் 2015 இலிருந்து நடைபெற்று வருகிறது. அப்றாபூ மன்சூர் ஹேடி தலிமையிலான அரசாங்கத்திற்கும் ஹூதி ஆயுததாரிகளுக்குமிடையில் நடக்கும் இந்தப் போரில் சவூதி கூட்டணி அரசாங்க தரபிற்கும் ஈரான் போன்ற நாடுகள் ஆயுததாரிகள் தரப்பிற்கும் ஆதரவாக இருக்கின்றன.

கடந்த ஜூன் மாதம், பிரித்தானியா சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்பது சட்டத்துக்கு முரணானது என மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இருப்பினும் அரசாங்கம் இத் தீர்ப்பின் மீது உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு ஒன்றை மேற்கொண்டிருக்கும் வேளையில் முன்னைய ஒப்பந்தங்களுக்கிணைய ஆயுத விற்பனை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆயுத விற்பனைகளுக்கான புதிய உரிமங்கள் வழங்கப்படுவதை சர்வதேச வர்த்தக அமைச்சர் லியாம் பொக்ஸ் நிறுத்தி வைத்திருக்கிறார்.

இருப்பினும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஆயுத சந்தைக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்கு சவூதி அரேபியா அழைக்கப்பட்டிருக்கிறது. “யேமனில் நடந்தேறிவரும் கொடுமைகளைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் ஆயுத விற்பனையை முன்னணிப்படுத்துவது அவமானத்துக்குரியது” என சிமித் கூறினார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)