யேமன் | சவூதி அரேபியா தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்

Spread the love

சவூதி அரேபியா தலைமையில் யேமனில், தமர் நகரத்திலுள்ள தடுப்புக்காவல் நிலையமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலின்போது 100 பேருக்கு மேற்பட்ட ஹூதிஸ் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. காயப்பட்ட 40 பேர்கள் வரையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்கள்.

யேமன் அரசாங்கத்துக்கு ஆதரவான சவூதி அரேபியாவின் தலைமையிலான படைகள் பிரிவினை கோரி வரும் ஹூதிஸ் மக்கள் வாழும் பிரதேசங்களில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. குறைந்தது ஆறு தடவைகள் இத் தாக்குதல்கள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

.யேமன் | தவிர்க்க முடியாத பிரிவினை

தாக்குதல்கள் நடைபெற்ற இடம் ஒரு சிறைச்சாலை என்றும் இங்குள்ள மக்களை சர்வதேச செஞ்சுலுவைச் சங்கம் முன்னர் பல தடவைகள் பார்வையிட்டுள்ளன என்றும் தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களைச் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் பணிகளின் மேற்பார்வையாளர் பிரான்ஸ் றோச்சென்ஸ்டீன் கூறினார்.

Print Friendly, PDF & Email
>/center>