யூக்கிரெய்ன்: ஐரோப்பாவின் தோல்வி!
சிவதாசன்
ரஸ்ய அதிபர் புட்டினும் அமெரிக்க அதிபர் ட்றம்பும் கடந்த புதனன்று 90 நிமிடங்கள் உரையாடினார்கள். 2022 இல் யூக்கிரெய்ன் போர் ஆரம்பித்ததன்பின் இரு நாடுகளும் உத்தியோஈகபூர்வமாகப் பேசியது இதுவே முதல் தடவை. இவர்களின் பேச்சுக்களின் சாரத்தை வைத்துப் பார்த்தால் யூக்கிரெய்ன் போரில் ரஸ்யா மகத்தான வெற்றியைத் தழுவப்போகிறது எனவே தெரிகிறது. இத்தொலைபேசி உரையாடலையடுத்து அமெரிக்க – ரஸ்ய பேச்சுவார்த்தை உடனடியாக ஆரம்பிக்கப்படவிருக்கிறது. இதில் யூக்கிரெய்னின் முன்னாள் அதிபர் செலென்ஸ்கிக்கு (இவருடைய பதவி மே 2024 உடன் காலாவதியாகிவிட்டது) அழைப்பு விடுக்கப்படுமோ தெரியாது.
லிஇத் தொலைபேசி உரையாடலின் இணக்கப்பாடுகளில் முக்கியமான அம்சங்கள்: 1). யூக்கிரெய்னுக்கு நேட்டோ அங்கத்துவம் வழங்கப்படமாட்டாது 2). ரஸ்யா கையகப்படுத்திய பிரதேசங்கள் விடுவிக்கப்பட மாட்டாது 3). அமெரிக்கப் படைகள் யூக்கிரெய்னில் நிலைகொள்ள மாட்டாது. போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து புட்டினின் கோரிக்கை நேட்டோ அந்நாட்டில் நிலைகொள்ளக்கூடாது என்பதுதான். யூக்கிரெய்ன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது கூட அவருக்குப் பிரச்சினையாக இருக்கவில்லை. 1997 இல் கோர்பச்சேவுக்கு அமெரிக்காவும் நேட்டோவும் கொடுத்த வாக்குறுதிகளிலொன்று கிழக்கு பேர்லினுக்கு கிழக்கே நேட்டோ ஒரு அங்குலம் கூட நகர மாட்டாது என்பதே. ஆனால் அமெரிக்காவும் நேட்டோவும் இவ்வாக்குறுதியைக் காப்பாற்ற மறுத்தமையால் தான் புட்டின் தன் போரை ஆரம்பிக்கவேண்டி ஏற்பட்டது.
ட்றம்ப் – புட்டின் உரையாடல் பல ஐரோப்பிய, மேற்கு நாடுகளின் தலைவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இத்தனை மனித அழிவுகளுக்கும், இடப்பெயர்வுகளுக்கும் , பிரதேச இழப்புக்களுக்கும் பின்னர் ஐரோப்பா ரஸ்யாவிடம் சரணடைவது அதிர்ச்சியைத் தரவல்லது தான். ஆனால் தேர்தலுக்கு முன்னரிருந்தே ட்றம்ப் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து வந்தவர். அத்தோடு தான் கூறியவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த முயற்சிப்பவர். எனவே அவரது இந்த அணுகுமுறை குறித்து யாரும் அதிர்ச்சியடைய முடியாது.
இவ்வுரையாடலில் உடன்பட்ட அம்சங்கள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அமெரிக்க தலைமையிலான மேற்குக்கு இது ஒரு படு தோல்வி எனவும் அதற்கு ட்றம்பே காரணமெனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும். இதை நிவர்த்தி செய்ய ட்றம்ப் அமெரிக்காவும் நேட்டோவும் பெருமைப்படும்படியான பிறிதொரு விடயத்தில் கைவைக்கச் சாத்தியங்களுண்டு. அது காசாவாகவோ, கனடாவாகவோ அல்லது கிறீன்லாந்தாகவோ இருக்கலாம். அதிர்ச்சி தரும் எவ்விடயங்களையும் செய்வதற்கு அவர் தயார்.
த்யூக்கிரெயினில் பைடனும் தோழர்களும் வியாபாரம் செய்தவர்கள். செலன்ஸ்கி உடபட பைடனின் குடும்பமும் தோழர்களும் இதனால் பைகளை நிரப்பிக் கொண்டவர்கள். அமெரிக்காவின் ஆயுத வியாபாரிகள் பல கோடி டொலர்களைச் சம்பாதித்தவர்கள். வியாபாரி ட்ற்ம்பிற்கு இது தெரியும். அமெரிக்கப் பணம் அமெரிக்கர்களுக்கு மட்டுமே செலவிடப்படவேண்டும் (இஸ்ரேலைத் தவிர) என முனைப்போடு செயற்படும் ட்றம்பிடமிருந்து இது எதிர்பார்க்கப்படவேண்டிய ஒன்று.
கடந்த 10 வருடங்களாக ரஸ்யா முன்வைத்துவரும் கோரிக்கை நிறைவேறும் தருணமிது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் யாள்டா, கிரிமியாவில் , பெப்ரவரி 4-11 இல், நடைபெற்ற சோவியத் – அமெரிக்க பேச்சுவார்த்தையின்போது போருக்குப் பின்னான ஜேர்மனி, போலந்து போன்றவற்றின் நிர்வாகமும், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தேவைகளும் பேசப்பட்டன. இன்மேல் நடைபெறவிருப்பது இரண்டாவது யாள்டா ஒப்பந்தம். கோர்பச்சேவ் ஏமாற்றப்பட்ட பின்னர் ரஸ்யாவிற்குக் கிடைத்திருக்கும் வாட்டர்லூ தருணமிது.
என்ன இருந்தாலும் தனது அணூவாயுதங்கலைப் பாவிக்காது பொறுமையோடிருந்து, சிரியாவைத் தானம் செய்து யூக்கிரெய்னில் தனது நோக்கத்தை நிறைவேற்றிய புட்டினுக்கு வாழ்த்துக்கள்! (Image Courtesy: Sergey Guneev / Sputnik)
