Satire | கடி-காரம்

யாழ் மாநரகசபையில் ‘தர்பார்’ – ரஜனி வேடத்தில் உறுப்பினர்கள்!

கள்ளடி வேலன்

DISCLAIMER: இப்பகுதியில் வெளியாகும் விடயங்கள் எவரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்படவில்லை. விடயங்கள் உண்மையல்லவெனினும் சமூகம் சார்ந்த சில சம்பவங்களை அடியொற்றியவை என்ற தொனி இடைக்கிடையே வெளிப்படலாம்.

இலங்கை அரசாங்கத்தைக் கலைப்பது தொடர்பாக மாநரகசபை உறுப்பினர் ஒருவர் முன்வைத்த தனிநபர் மசோதா பற்றிய விவாதம் யாழ்ப்பாணம் இன்று நரகபிதா தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

https://www.facebook.com/pakalavan.tv/videos/2251101794991732/

மிகவும் அமைதியாகவும், மாநரகசபையின் நெறிமுறைகளுக்கு அடங்கவும் நடந்த இந்த விவாதத்தின்போது, இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு கேரளாக் கஞ்சாவை இறக்குமதி செய்வது முதல் பல அரிய திட்டங்களைத் தாம் பரிந்துரைத்ததாகவும் அதை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி மறுத்துவிட்டதாகவும் அதனால் அவ்வரசாங்கத்தைக் கலைத்துவிட மாநரகசபை உத்தரவிட வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் ‘ஆவா’ குழுவினரைக் கொழும்புக்கு அனுப்பி அரசைக் கைப்பற்றவேண்டுமெனவும் உறுப்பினர் தன் மசோதாவில் குறிப்பிட்டிருந்தார்.

யாழ்ப்பாண மாநரகத்தின் அழகை உலகெங்கும் பரப்பும் வடிகாலின் வடிவமைப்பை வடமாகாணம் முழுவதும் அமுல்ப்படுத்தவேண்டுமென்றும் ஒரு தீர்மானத்தை இன்னுமொரு உறுப்பினர் முன்மொழிந்தார்.

பல உறுப்பினர்களும் அவ்வப்போது எழுந்துநின்று மத பாராயணங்களை ஓதியது கண்கொள்ளாக் காட்சியாகவிருந்தது.

-யாழ்ப்பாணத்திலிருந்து கள்ளடி வேலன்