யாழ். போதைப்பொருள் விநியோகத்தில் பொலிசாருக்குத் தொடர்பு – அமைச்சர் தேவானந்தா
இந்திய மீனவர்களும் இதற்கு காரணம்
வடக்கு மாகாணத்திற்கு கடத்தப்பட்டு விநியோகிக்கபடும் போதைப்பொருள் விடயத்தில் சில யாழ்ப்பாண பொலிசாருக்கு தொடர்பிருக்கிறது என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சகால ரத்நாயக்காவிடம் முறையீடு செய்திருக்கிறார்.
போதைப்பொருள் தொல்லை தொடர்பாக சட்ட ஒழுங்குகளுக்கான அமைச்சருடன் நேற்று நடைபெற்ற இணையவழிச் சந்திப்பின்போது “போதைப்பொருள் தொல்லையை நீக்கவேண்டுமாகில் யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டத்துக்குள் வேலை செய்ய வேண்டும்” என அமைச்சர் தேவானந்தா கூறியுள்ளார்.
போதைப் பொருள் கடத்துபவர்கள் பலரை யாழ்ப்பாண பொலிசார் பாதுகாக்கின்றனர் எனப் பொதுமக்கள் பலர் தம்மிடம் கூறியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதே வேளை இலங்கைக் கடலெல்லைக்குள் அத்துமீறிவரும் இந்திய மீனவர்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். (நன்றி: தி ஐலண்ட்)
