Sri Lanka

‘யாழ் நிலா’ – யாழ்ப்பாணத்துக்கு புதிய சொகுசு புகையிரத சேவை ஆரம்பம்

காங்கேசன்துறைக்கும் கல்கிசைக்குமிடையே புதிய சொகுசு புகையிரத சேவையொன்று தொடக்கிவைக்கபபட்டுள்ளது. ‘யாழ் நிலா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சேவை ஒவ்வொரு வாரமும் வெள்ளி இரவு 10:30 க்கு கல்கிசையில் புறப்பட்டு சனி காலை 6:00 மணிக்கு கான்கேசன்துறையை அடையும். பின்னர் ஞாயிறு இரவு 10:30 க்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மறுநாள் திங்கள் காலை 6:00 மணிக்கு கல்கிசையை அடையும்.

இருக்கைகளுக்கான கட்டணமாக முதலாம் வகுப்புக்கு ரூ 4,000, இரண்டாம் வகுப்புக்கு ரூ.3,000 மூன்றாம் வகுப்புக்கு ரூ.2,000 என வசூலிக்கப்படுகிறது. முதலாம் வகுப்பில் 106 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 128 இருக்கைகளும், மூன்றாம் வகுப்பில் 336 இருக்கைகளும் இருக்கின்றன. இணைய வழியாக இருக்கைகளைப் பதிவுசெய்துகொள்ளமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.