News & AnalysisSri Lanka

யாழ். நகரபிதா விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிணையில் விடுதலை

வெள்ளி அதிகாலை 2:30 மணிக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண நகரபிதா விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெள்ளி மாலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர் மீதான வழக்கைப் பதிவுசெய்ததுடன் 2 இலட்சம் ரூபா பிணையில் அவரை விடுதலை செய்துள்ளது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்ப்பட்டிருந்தாலும், யாழ்ப்பாண மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர்மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழல்லாது சாதாரண குற்ற ஒழுங்கியல் சட்ட நியதிகளுக்கமையவே வழக்குப் பதிவுசெய்துள்ளது. அவர் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.உ. திரு எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.