யாழ். நகரபிதா மணிவண்ணன் அவர்களின் மார்க்கம் நகர் வருகை

யாழ். நகரபிதா விஸ்வலிங்கம் மணிவண்ணனின் கனடா வருகையின்போது யோர்க் பிராந்தியத்தின் கழிவுநீர்ப் பராமரிப்பு மையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். மையத்தின் முதன்மைப் பிரதிநிதி எமேர்ஸன் மற்றும் உதவியாளர் லீனா பிகியோனி ஆகியோர் மையத்தின் செயற்பாடுகள் மற்றும் நிபுணத்துவ தேவைகள் பற்றி நகரபிதாவிற்கு விளக்கங்களை அளித்தனர். தமிழர் சமூகப் பிரதிநிதி பிரகல் திருஞானசுந்தரம் இவ்வேற்பாடுகளைச் செய்திருந்தார். (படங்கள், தகவல்: பிரகல் திரு/ முகநூல்)