Sri LankaVolunteer Orgs.

யாழ். அரியாலை முன்பள்ளிக்கான விளையாட்டு உபகரணங்களை நிறுவிய 52 வது படைப்பிரிவு!

அரியாலை பூம்புகார் சண்முகா முபள்ளிக்கான சிறுவர் பூங்காவுக்கான உபகரணங்கள் அவுஸ்திரேலிய றோட்டரிக் கழகத்தால் அன்பளிப்பு

அரியாலை பூம்புகார் சண்முகா முன்பள்ளிக்கான சிறுவர் பூங்காவில், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் 12 கெமுனு மற்றும் 523 பிரிகேட்டின் கீழ் இயங்கும் 5 ஆவது எஞ்சினியர் சேவைகள் றெஜிமெண்ட்டைச் சேர்ந்த படையினர் புதிய விளையாட்டு உபகரணங்களை நிறுவுவதற்கு உதவிகளைப் புரிந்துள்ளனர்.

இவ்வுபகரணங்களை அவுஸ்திரேலியாவிலுள்ள ஃபிளமிங்டன்/கென்சிங்டன் ரோட்டரிக் கழகம் தானம் செய்திருந்தது. பாதுகாப்புப் படைகளின் யாழ்ப்பாணத் தலைமையகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கொழும்பு ரோட்டரிக் கழகம் உபகரண வழங்கலை ஒருங்கிணைத்திருந்தது. பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி ரூவான் வணிகசேகராவின் பணிப்பின் பேரில் 52 வது படைப் பிரிவைச் சேர்ந்த படையினர் பூங்காவில் இவ்வுபகரணங்களை நிறுவினர்.

புதிய உபகரணங்களுடனான குழந்தைகள் பூங்காவை, டிசம்பர் 14, 2019 அன்று, கொழும்பு றோட்டரிக் கழகத்தின் தலைவர், றோட்டேரியன் சரவணன் சவுந்தரராஜன் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைத்தார். 52 வது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இன்நிகழ்விற்கு அதன் கட்டளைத் தளபதி உட்படப் பல விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்வின்போது முன்பள்ளிச் சிறுவர்களுக்கு நன்கொடையாளர்களால் கற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

52 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, இதர மூத்த அதிகாரிகள், கொழும்பு றோட்டரிக் கழக உறுப்பினர்கள், யாழ். மேலதிக அரசாங்க அதிபர் (காணி), அரியாலை குழந்தைகள் அபிவிருத்திப் பிரிவைச் சேர்ந்த உதவிக் கல்விப் பணிப்பாளர், ஆசிரியர்கள், படையினர், குழந்தைகள், பெற்றோர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.