யாழ்ப்பாணத்தில் கலாச்சார நிலையம் | இந்திய உதவியுடன் நிறுவப்படுகிறது -

யாழ்ப்பாணத்தில் கலாச்சார நிலையம் | இந்திய உதவியுடன் நிறுவப்படுகிறது

யாழ்ப்பாண கலாசார நிலையம் – கட்டடக்கலையின் ஊடாக ஜனநாயகத்தை வெளிப்படுத்தல்

யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் புல்லுக்குளம் இரண்டிற்கும் இடையில், முன்பு  திறந்வெளி அரங்கு இருந்த இடத்தில் யாழ் மாநகரசபைக்கு சொந்தமான காணியில், குறிப்பிட்ட யாழ்ப்பாண கலாசார நிலையம் அமைகின்றது. இந்திய அரசின் 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியில் அமைக்கப்படுகின்றது. இதற்கான கட்டடவடிவமைபப்பு ஆனது, 2011 யூன் மாதம் அறிவிக்கப்பட்ட கட்டடக்கலைஞர்கள் இடையில் நடத்தபட்ட போட்டியின்ஊடக தெரிவு செய்யப்பட்டது.

இப்போட்டியினை இலங்கை கட்டடக்கலைஞர் அமைப்பு மற்றும் இந்திய உயர்தானிகரகம் இணைந்துமேற்கொண்டனர். போட்டியில் பங்குபற்றிய இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 29 வடிவமைப்பாளர்களில்கொழும்பில் வசிக்கும் கட்டடக்கலைஞர் மதுர பிறேமதிலக மற்றும் அவரது நிறுவனத்தினர் முதலிடம் பெற்றனர்.இவருடைய கற்பனையில் உருவான கட்டடம் 2016 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு முடிவுறும் தருவாயில் இருக்கின்றது. <<மேலும்>>

 

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *