மோடிஜி வாழ்க!
மாயமான்
முன்னர் எனக்கு மோடியைப் பிடிக்காது. ஆனால் இப்போது பிடிக்கும். எப்படி சணடை பிடிக்கும்போது பிடிக்காத (தற்காலிகமாக) மனைவியைச் சமைக்கும்போது பிடிக்குமோ (chauvinistic?) அப்படித்தான் மோடியையும் இப்போது பிடித்திருக்கிறது. எல்லாம் காரணத்தோடு தான். குடுமி சும்மா ஆடாது.
இலான் மஸ்க்கின் ருவிட்டர் திமிருக்கும் மார்க் சக்கர்பேர்க்கின் ஃபேஸ்புக் திமிருக்குமிடையே நடந்துவரும் போட்டி இப்போது வெடித்துக்கிளம்பியிருக்கிறது. ருவிட்டருக்குப் போட்டியாக Threads என்ற பெயரில் சக்கர்பேர்க் புதிய கீச்சுத் தளமொன்றை (instagram) ஆரம்பித்திருக்கிறார். அதற்கு என்ன logo வைப் போடலாம் என மண்டையைப் பிய்த்துக்கொண்ட சக்கர்பேர்க் பத்துப் பலரிடமும் ஆலோசனை கேட்டிருக்கிறார். இந்த வேளையில் தான் நம்ம (நம்ம yes!!!) மோடிஜி உலகிலேயே மூத்த மொழி தமிழ் எனப் பேசியதை சக்கர்பேர்க் கேட்டுவிட்டு “தமிழில் பறவையை எப்படி அழைப்பார்கள்” என யாரோ ஒரு தமிழரிடம் கேட்டிருக்கிறார். “குருவி ” என்று அதற்குப் பதில் வந்ததும் அவருக்கும், நமக்கும், மோடிஜிக்கும், தமிழுக்கும் வந்தது அந்த “ஆஹா” moment; குருவியின் முதல் எழுத்தான ‘கு’ வை அவர் தனது தளத்தின் logo ஆக்கிவிட்டார். அழகான logo. இனிமேல்தான் போட்டியே ஆரம்பிக்கப் போகிறது.
உலகின் மூத்த மொழியை இன்னும் உச்சத்துக்குக் கொண்டுபோக உதவிய மோடிஜியை இன்றிலிருந்து எனக்கு மிகவும் பிடிக்கும்! வாழ்க மோடிஜி!
(இந்த விபரம் ருவிட்டரில் வரவில்லை. நண்பர் ஒருவர் ஈ-மெயிலில் அனுப்பியிருந்தார்.