‘கோதாகோகம’ ஆர்ப்பாட்டக்காரரர் மீது மஹிந்த ஆதரவாளர் தாக்குதல்!
சஜித் பிரேமதாச மீதும் தாக்குதல்; மேற்கு மாகாணத்தில் ஊரடங்கு!
கண்டியில் கோதாகோகம முகாமும் தகர்க்கப்பட்டது!
அலரி மாளிகையில் இன்று குழுமிய மஹிந்த ஆதரவாளர்கள் காலிமுகத் திடலின் ‘கோதா கோகம’ களத்திற்குச் சென்று அங்கு அமைதிவழியில் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதுடன் முகாம்களைத் தாக்கியழித்தும் தீயிட்டுக்கொழுத்தியுமிருப்பதாகச் செய்திகள் கிடைத்துள்ளன. மைனா கோகம முகாம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்தியொன்று தெரிவிக்கின்றது.
அதே வேளை ஆர்ப்பாட்டக் களத்துக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இரான் விக்கிரமரத்ன ஆகியோர்மீதும் மஹிந்தவின் ஆதரவாளர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தமது வாகனத்தில் திர்ம்பிச் சென்றுவிட்டார்கள் எனக் கூறப்படுகிறது. ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்காவும் கோதாகோகம களத்திற்குச் சென்றிருப்பதாகத் தெரிகிறது
இம்முகாமில் முன்னார் இராணுவத்தினர் உட்பட, புத்த பிக்குகள் மற்றும் போராட்டக்காரர்களும் இருந்தனர்.
மஹிந்தவின் ஆதரவாளர்கள் ஏற்கெனவே பொல்லுகளுடன் தயாராக வந்திருந்ததுடன் அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பொலிசாரையும் தாண்டித் தமது வன்முறையைத் தொடர்ந்து வருகிறார்கள். பொலிஸ் ஆரம்பத்தில் எதுவித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
தற்போது காலிமுகத் திடலில் இராணுவமும் அதிரடிப்படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. மேற்கு மாகாணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.