NewsSri Lanka

மைத்திரிபால சிறிசேன விரைவில் கைதுசெய்யப்படலாம்?

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமையை முன்வைத்து அவரைக் கைதுசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

இக் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணையம் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து ஆணையத்தின் பரிந்துரைகளில் ஒன்று மைதிரிபால சிறிசேனவின் கைது ஆகும். பேராயர் முதல் பலர் அவரது கைது தொடர்பாக அழுத்தங்களைக் கொடுத்துவந்த போதிலும் அரசாங்கம் இதுவரை அதைத் தவிர்த்து வந்திருக்கிறது. சிறீசேன தற்போது ஆளும் கூட்டணியிலிருந்து எப்போதும் விலகலாம் என்று பேசிவருவதைத் தொடர்ந்து அவர்மீது அரசு விடுக்கும் எச்சரிக்கையாக இது இருக்கலாமோ எனவும் பார்க்கப்படுகிறது.

இதே வேளை கத்தோலிக்கசபைப் பேராயர் மல்கம் ரஞ்சித் கடந்த சில நாட்களில் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் 2019 தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் ந்டத்தப்பட்டன எனவும் தாக்குதல்களுக்குக் தற்போதய அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என்ற சந்தேகம் வலுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தாக்குதல்களின் சூத்திரதாரியான சாஹ்ரான் ஹாசிமைக் கைதுசெய்வதற்கு பிடியாணையுடன் தயாராகவிருந்த பொலிஸ் அதிகாரி நாளக டி சில்வாவை இரண்டு நாட்களுக்கு முன்ன்ர் கைதுசெய்ததற்கு இத்ய்வே காரணம் என பேராய ரஞ்சித் சிலநாட்களின் முன்னர் தெரிவித்திருந்தார்.

இது போன்ற அழுத்தங்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும், பங்காளிக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கடசியின் நெருக்குதலைச் சமாளிக்கவும் அதன் தலைவர் சிறிசேனவைக் கைதுசெய்ய அரசு முயற்சிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வேளை தான் எதற்கும் தயாராக இருப்பதாக மைத்திரிபால சிறீசேன தயாராகவுள்ளதாகத் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.