NewsSri Lanka

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் சந்தேகம்?

மே 31, 2019


இவ்வாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவேதும் எடுக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்தார்.

“தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுப்பதில் நான் அவசரப்பட விரும்பவில்லை” என புது டெல்ஹியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதி சிறிசேன கூறினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவம் முடிந்த மறுநாள் இப் பத்திரிகையாளர் மாநாடு நடைபெற்றிருந்தது.

நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மைத்திரிபால சிறிசேன மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

பிரதமர் நரேந்திர மோடியின் சிறீலங்கா வருகை ஜூன் மாதமளவில் நடைபெறலாமெனவும் அதற்கான அழைப்பை ஜனாதிபதி இச் சந்திப்பின்போது வழங்கியிருந்தார் எனவும் அறியப்படுகிறது.